29


4.   இராசேந்திரசிங்க   வளநாட்டு   மிறைக்கூற்றத்து    காமரவல்லி
சபையாரும்,    5.   வளநாட்டுப்   பராந்தக   சதுர்வேதிமங்கலத்துச்
சபையாரும்,  6.  நித்தவிநோத  வளநாட்டு முடிச்சோணாட்டு ஜனநாத
சதுர்வேதிமங்கலத்துச்  சபையாரும்  ஆவர். இச்சபையார்கள் சபைக்கு
ஒவ்வொருவராக   அறுவரை  இட்டிருந்தனர்.  இங்ஙனம்  இடப்பட்ட
ஒவ்வொரு    கரணத்தாரும்    தங்கள்   தங்களுக்குக்   கீழ்   இரு
கரணத்தார்களை   அரசன்    கட்டளைப்படி  நியமித்துக்கொண்டனர்.
இவர்களுக்குக்  கீழ்க்  கரணத்தார்கள் எனப் பெயர். எனவே  தஞ்சை
இராசராசேச்சரத்துக்குக் கணக்கு எழுத அறுவரும், அவர்களுக்குக் கீழ்
கணக்கு     எழுதப்     பன்னிருவரும்     ஆகப்    பதினெண்மர்
நியமிக்கப்பெற்றிருந்தனர்.

திருமெய்க்காப்பார்களை நியமித்தது

திருமெய்க்காப்பார்     என்பார்  திருக்கோயிலையும்   அதிலுள்ள
பொருள்களையும்  பாதுகாப்பவர்  (Temple  Watch  man)  ஆவர்.
முதலாம்   இராசராசசோழன்   கட்டளைப்படி  இவர்களைத்  தஞ்சை
இராசராசேச்சரத்து இட்டவர்:-

1,    அருமொழிதேவ வளநாட்டு இங்கணாட்டு விமலசித்தமங்கலம்,
நெடுமணலாகிய    மதனமஞ்சரி    சதுர்வேதிமங்கலம்,    குன்றியூர்,
புறங்கரம்பை   நாட்டுப்   பல்லவன்   மாதேவி   சதுர்வேதிமங்கலம்,
பெரும்பலமருதூர்,     குறுக்கை:     அளநாட்டுக்    கீழையிலாகிய
பரமேஸ்வரமங்கலம்,     செம்பியன்மாதேவி      சதுர்வேதிமங்கலம்;
வெண்டாழை வேளூர்க் கூற்றத்துச் சிற்றாமூர்;

2,    க்ஷத்திரிய  சிகாமணி   வளநாட்டுத்  திருநறையூர்  நாட்டுத்
திருநறையூர்,  அபிமானபூஷண  சதுர்வேதிமங்கலம்,  வண்டாழஞ்சேரி,
கூரூர்,  கற்குடி,  செற்றூர்க்  கூற்றத்துச் செற்றூர்,  குடவாயில், நாலூர்;
இங்கணாட்டு   இங்ஙண்;   தேவூர்நாட்டு   ஆலத்தூர்;  அளநாட்டுப்
பெருங்கடம்பூர்,     பாப்பார்குடி,      பொருந்தம்     பொருந்தை;
பட்டினக்கூற்றத்துக்  கொட்டாரக்குடி,  திருக்கண்ணங்குடி, கள்ளூராகிய
சன்னமங்கலம்; மருகல் நாட்டு மருகல், பூதனூர்,  வைப்பூர், தஞ்சாவூர்,
திருவாரூர்க்கூற்றத்து   ஆடியப்பிமங்கலம்,   வேளாநாட்டு  ராஜமல்ல
சதுர்வேதி  மங்கலம்,  பெரும்போழ்;  பனையூர்  நாட்டுப்  புவலோக
மாணிக்க சதுர்வேதி மங்கலம்;

உய்யக்கொண்டான் வளநாட்டுத் திருநறையூர் நாட்டுத் தோட்டமான
மும்மடிசோழ   சதுர்வேதிமங்கலம்,   பாம்பூர்   நாட்டுப்   பாம்புரம்,
கடையக்குடி, நல்லாவூர்: அம்பர்நாட்டு அதியரைய