நூன்முகம் "தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி" "சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் அந்தி வானிறத் தானணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னானடி வந்திப் பாரவர் வானுல காள்வரே." (அப்பர், 5. சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை 97 - 1.) திருக்கோவில் செல்வார் திருமந் திரநூல் உருக்கமுடன் கொண்டுசென் றோதின் - பெருக்க அறமுதலாம் நான்கும் அருள்முதலாம் ஐந்தும் உறவருள்வன் முக்கணிறை ஓது." தமிழ் : "மொய்வைத்த வண்டின் செறிசூழன் முரன்ற சந்தின் மைவைத்த சோலை மலையந்தர வந்த மந்த மெய்வைத்த காலுந் தருஞால மளந்த மேன்மைத் தெய்வத் தமிழுந் தருஞ்செவ்வி மணஞ்செய் ஈரம்." (12. மூர்த்தி நாயனார், 3.) "திசையனைத்தின் பெருமையெலாம் தென்றிசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயலவழக்கின் துறைவெல்ல இசைமுழுது மெய்யறிவும் இடங்கொள்ளு நிலைபெருக." (12. சம்பந்தர், 24.) "நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பு ஞான சம்பந் தனுக்குல கவர்முன் தாள மீந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை யென்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடு மங்க ணன்றனை யெண்கண மிறைஞ்சுங் கோளி லிப்பெருங் கோயிலு ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே." (7. நம்பியாரூரர், 12, 8.) "பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே." (10. நம்பிரான்மூலர், 152.)
|