பக்கம் எண் :

1274
 

நிற்கின்றதெனக் கொள்க. இவ்வெண்பாக்கள் நக்கீரரால் பாடப்பட்டன எனக் காணப்படுகின்றது. அவரே பதினொராந் திருமுறையிலும் ஓர் உண்மை கட்டுரைக்கின்றனர். அது வருமாறு :

"ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று."

(11. கோபப்பிரசாதம், வரி - 84 - 5.)

கண்மூடி முறையாக மண்ணுளோர் துண்ணெனத் தமிழ்மொழி வடமொழியினின்று பிறந்துளது என வாளா பிதற்றினாரும் உளர். அவர்களனைவர்கட்கும் சிவஞானபோதப் பேருரையாசிரியர் 'சிவஞான முனிவரனார்' நல்லதோர் நடுநிலை நயமொழி புகன்று அறிவு கொளுத்துவாராயினர். அது முழுவதும் தொல்காப்பியர் சூத்திர விருத்தியுட் காண்க சுருக்கம் வருமாறு :

தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணங்களும், இன்னோரன்ன பிறவும் வடமொழிக்கண் பெறப்படாமை...

தமிழின்கண் வேத ஆகமங்களாகிய மறைநூலும் முறை நூலும் இல்லை என வல்லைக் குழறி மருண்டாரும் பலர். அவர் மருட்சி அத்தனையும், 'வெற்பிற்றோன்றிய வெங்கதிர்கண்டவப், புற்பனிக்கெடுமாறு' போன்று திருமூலர் தமிழ்மூவாயிரம் திருவருளால் தோன்றியதும் கெட்டொழிந்தன: எனினும் அந்நூலை அடியோடு தோன்றவொட்டாது திருவாவடுதுறைப் பலிபீடத்தின்கண் மறைத்தடக்கினர். அம் மறைப்புப் புதையல் பல நூற்றாண்டுகளுக்குப்பின் தோன்றியருளிய திருஞானசம்பந்தப் பெருமானார் திருவருள் மொழியான் வெளிவருவதாயிற்று. அக் குறிப்பு வருமாறு :

'திருஞானசம்பந்தப் பெருமானார்பால் அவர்தம் திருத் தந்தையார் நான்மறை வேள்வியினை நயந்து புரியுமாறு பொன் வேண்டியிருந்தனர். பெருமானார் திருவாவடுதுறை இறைவன் பால் விண்ணப்பித்தருளினர். இறைவனும் உலவாக்கிழி நல்கியருளினன்.' அது வருமாறு :

"நச்சி யின்றமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய இறைவரின் னருளால்