அச்சி றப்பருள் பூதமுன் விரைந்தகன் பீடத்து உச்சி வைத்தது பசும்பொனா யிரக்கிழி யொன்று.' (12. சம்பந்தர், 426.) சம்பந்தப்பெருமானார் பணிந்து அப் பீடத்தணைந்த உலவாக் கிழியினை எடுத்து உச்சிமேல் வைத்துத் தந்தைபாலளித்தருளினர். அப்பொழுது வருமாறு ஓதியருளினர் : "ஆதி மாமறை விதியினா லாறுசூழ் வேணி நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி தீது நீங்கநீர் செய்யவும் திருக்கழு மலத்து வேத வேதிய ரனைவரும் செய்யவு மிகுமால்." (12. சம்பந்தர், 429.) ஆதிமாமறை : செந்தமிழ்த் திருநான்மறை முன்னாகவே - முழுமுதன் மையாகவே. நல்வேள்வி - கொலைபுலையில்லா நிலைசேர் சிவவேள்வி. செவி வழக்காக வருவன வருமாறு : சம்பந்தப் பெருமானார் பீடத்தின்கீழ்ப் பணிந்தெழுந்ததும் திருவருள் வலத்தால் ஈண்டு உலவாத் தமிழ்மணம் நிலவாநின்று கமழ்கின்றது. பீடத்தின் கீழ்ப் பார்க்க என்று அருளினர். அகழ்ந்து பார்த்தபோது திருமந்திரச் செப்பேடு திகழ்ந்து விளங்கிற்று. அதனை உச்சிமேற்கொண்டு உலகுக்கு அளித்தருளினர் என்பதே இவ்வுண்மை திருத்தொண்டர் புராணத்தின்கண் காணப்படாவிடினும் உலகின்கண் பெருவழக்காகக் கேட்கப்படுகின்றது. எவ்வாறாயினும் திருமந்திரம் மறைக்கப்பட்டு வெளிப்போந்ததென்னும் உண்மை ஐயமின்றி வெளிப்படுகின்றது. இதுபோல் பண்டைச் செந்தமிழ்த் திருநான்மறையும் மறைக்கப்பட்டு விட்டன எனும் மெய்ம்மை உய்த்துணரக் கிடக்கின்றது. அக் கொடுமை புலனாகா வண்ணம் 'பேர்கொண்ட பார்ப்பார்' ஒரு புனைகதை கட்டி அனைவரையும் மயக்கினர். அஃதாவது 'அருமறைகள் பெரும்பொருளாம் சிவபெருமானை விரும்பி வழிபட்டுத் திருமறைக்காட்டு நேர்முகத் திருக்கதவினைத் திருக்காப்பிட்டுச் சென்றன. இனி அம் மறைகள் எப்பொழுது பூசனைக்குவரும் அப்பொழுது அக்கதவம் தானே திறக்கும்' என்பதாம். நேர்முகம் - அபிமுகம்; கோபுரப்பெருவாயில். இதன் உண்மையினை நடுநின்று நான் எண்ணுவேமாயின் அப்பார்ப்பார் செந்தமிழ்ச் தொன்மைத் திருநான்மறையினுக்கு அம் மறை வழங்காவண்ணம் இழைத்த சொல்லொணாக் கொடுமையினை
|