மெய்பொருள்வண் டமிழ்பாடி யருளு மென்ன விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை இப்பரிசு நீரருளிச் செயதீ ராகில் இதுசெய்வே னெனப்பதிக மெடுத்துப் பாட. பாடியவப் பதிகப்பாட் டான பத்தும் பாடனிரம் பியபின்னும் பைம்பொன் வாயில் சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி நின்றெடுக்கத் திருக்காப்பு நீங்கிக் காட்ட ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பெழுந்த தகிலாண்ட மனைத்து மூழ்க." (12. சம்பந்தர். 580 - 2.) "அன்றர சருளிச் செய்ய வருமறைப் பிள்ளை யாரும் வென்றிவெள் விடையார் தம்மை விருப்பினாற் சதுர மென்னும் இன்றமிழ்ப் பதிகப் பாட லிசைத்திட விரண்டுபாலு நின்றவக் கதவு காப்பு நிரம்பிட வடைத்த தன்றே அடைத்திடக் கண்டு சண்பை யாண்டகை யாரு மஞ்சொற் றொடைத்தமி ழாளி யாருந் தொழுதெழத் தொண்ட ரார்த்தார் புடைப்பொழிந் திழிந்த தெங்கும் பூமழை புகலி வேந்தர் நடைத்தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்ற. அத்திரு வாயில் தன்னில் அற்றைநாள் தொடங்கி நேரே மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற வைத்தெதிர் வழக்கஞ் செய்த வரம்பிலாப் பெருமை யோரைக் கைத்தலங் குவித்துத் தாழ்ந்து. வாழ்ந்தது கடல்சூழ் வையம். (12 சம்பந்தர், 587 - 9.) அங்ஙனமிருந்தும் நம்மவரிற் சிலருக்கு அவ்வாரிய மறையின் மயல் பின்னும் விட்டபாடில்லை என்று தெளியுமோ இம் மயல் என்று நின்று வருந்துவதே தென்றமிழ்வாணர் செயத்தகும் பரிவென்க. அம்மட்டோ? மூவர் முதலிகள, தேவர் மூவர்க்கும் அறியெணாச் சிவபெருமானை யாவரும் உய்யச் செந்தமிழ்த் திருமறை பாடியருளினர் இத் திருமறையினைப் பண்பொடும் ஓதித் திருக்கோவில்களில் முறையாக எல்லா வழிபாடும் யாண்டும் யாவரும் செய்து போந்து நல்லாராகவேண்டுமென்பது அவர்தம் திருவுள்ளக் குறிப்பாகும். அவ்வுண்மை வரும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியான் உணரலாம்.
|