பக்கம் எண் :

1279
 

பேருரைக்கண் சிவஞானமுனிவரனார் பிறன்கோளாக எடுத்து மொழிவதால் இவ்வுண்மை விளங்கும்.

வேதம் எல்லா மொழிகளிலும் தனித்தனியுண்டு. அது போல் ஆரிய மொழியிலும் உண்டு. நம் அருமைச் செந்தமிழ் மொழியிலும் உண்டு. ஒவ்வொரு மொழியினரும் தத்தம் மொழிமறையினையே உயிர்போற் போற்றுகின்றனர். அதுபோல் ஆரியரும் போற்றுகின்றனர். ஆனால் நம்மவரிற் சிலர் அங்ஙனம் போற்றவில்லை. அதற்குமாறாக ஆரிய மறையே மறையெனவும் தமிழ்மறை வெறும் தோத்திரங்களெனவும் மொழிந்து மடிதற்றுப் போருக்கு முந்துகின்றனர். அந்தோ! இவர்கள் ஏன் தமிழராகப் பிறந்தோமென்று எண்ணுகின்றனர் போலும்! அவ் வாரியர் அமிழ் தினுமினிய தமிழ்மறையினைப் பேசுந்தமிழெனக்கூடக் கொள்வதின்று. கற்பதின்று, கேட்பதின்று: காணவும் நாணுகின்றனர். 'ஆரியமும் செந்தமிழும் ஆனான் கண்டாய்' என்பதும் இருமொழியும் வெவ்வேறென் பதனையே இனி துணர்த்தும். அம்மட்டோ? 'ஆரியன்கண்டாய் தமிழன் கண்டாய்' என்பதும் அவ்விருவரும் இருவேறினமும் நாடும் மொழியும் வெவ்வேறு உடையவரென்பதனையே உணர்த்தும். அவ்விருவர்க்கும் முழுமுதற் சிவபெருமான் ஒருவனே கடவுள் என்பது அதன்பொருள். அவை ஒன்றெனக் குழப்பித் தொன்றியலழிக்கும் ஒன்றாச் செயலை உணர்த்தாதென்க. தமிழ்மறைச் சுவையினை யறியாத் தற்கொலிமாந்தரைத் திருஞானசம்பந்தப் பெருமானார் நீத்தகன்று நாமும் நீத்தகல நெறி காட்டினர் என்பது வரும் நம்பியாண்டார்நம்பி திருமொழியானும் உணரலாம். அது வருமாறு :

"அடுசினக் ...............................................................................................

19. .........................................................................................................நீத்தது

அமிழ்ச்சுவை யேயறிந் தானடி பரவுந்

21. தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே."

(11. பிள்ளையார், திருமும்மணி - 4.)

முனைவன் நூலுக்கு முதலாகிய காரணத்தையே அருள் புரிவன் என்பது பண்டைத் தமிழர்கொண்ட வாய்மைக் குறிக்கோளாகும். அது வருமாறு:

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்."

(தொல். மரபு - 94.)

'முதல் நூல் ஆகும்' என்பதை 'நூல் முதல்' ஆகும் என மாறி நூலுக்குக் காரணம் எனக்கொள்க. முதல் - காரணம்.