நிலையிலா ஆரிய மறைகளிலுள்ள ஐயங்களைப் போக்குவது நிலையான தமிழ்மறையேயாம் என்பதனை வரும் திருமுறையான் உணர்க: "ஒருபிறப்பு மெய்தாமை யுடையார் தம்மை யுலகியல்பி னுபநயன முறைமை யாகும் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கு மறைமுனிவ ரெதிரே நின்று வருதிறத்தின் மறைநான்குந் தந்தோ மென்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம். சுருதியா யிரமோதி யங்க மான தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப் பரிதியா யிரகோடி விரிந்தா லென்னப் பரஞ்சோதி யருள்பெற்ற பான்மை மேன்மை கருதியா தரவோடும் வியப்புற் றேத்துங் கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன் வருதியா னப்பொருளென் றிறைஞ்சித் தாமுன் வல்லமறை கேட்டையம் தீர்ந்து வாழ்ந்தார். மந்திரங்க ளானவெலா மருளிச் செய்து மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த சிந்தைமயக் குறுமையந் தெளிய வெல்லாம் செழுமறையோர்க் கருளியவர் தெருளு மாற்றான் முந்தைமுதன் மந்திரங்க ளெல்லாந் தோன்று முதலாகு முதல்வனா ரெழுத்தஞ் சென்பார் அந்தியினுள் மந்திரமஞ் செழுத்து மேயென் றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்." (12. சம்பந்தர், 264 - 6.) "மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்தமே." (சம்பந்தர், 3, 22 - 2.) மேலும், "தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான்." (தாயுமானவர். கல்லாலின் - 14.)
|