தவக்கடப்பால் திருவடியுணர்வு (1623) கைவரப்பெறுவர். கைவரப்பெற்றாரால் நாட்டினுக்கு எல்லா நலமும் என்றும் நின்று நிலவும். போலிக்கோலமாம் அவ்வேடத்தாரால் எல்லாத் தீங்கும் உண்டாகும். அத்தகையோரை வேந்தன் நாடித் (1629) தண்டித்தல் கடனாகும். மெய்த்தவவேடர்க்கு வேண்டும் அடையாளம் பத்து (1636) ஆகும். திருநீறே திருவடி (1638) சேர்ப்பிக்கும். அடியார் திருக்கோலமே ஞானவேடமாகும். அடியாரவரே சித்த (1646) ராவர். சிவவேடம் அனைத்தும் உடலுக்கு அன்று; உயிருக்கே (1648)யாம். சிவவேடத்திற்குத் தகுதியில்லாதார் செவ்வியில்லாதவராவர். அவரைக் குருவெனக் கொள்வார் குழி (1652) வீழ்வர். நற்குருவால் திருவடிஞான (1670) முண்டாகும். என ஓதி விளக்குவதால் இத் தந்திரம்பேற்றுவழியாகும். ஏழாம் தந்திரம் இது நானூற்று ஏழு திருப்பாட்டுக்களையுடையது. ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பது பகுதிகளையுடையது. இது பேற்றுவழிபாடாகும். பேற்றுவழி பாடெனினும் சிவலிங்க வழிபாடெனினும் ஒன்றே. அவ் வழிபாட்டின் சிறப்புணர்தற்கு உடம்பகத்துக் காணப்படும் ஆறு நிலைகளும் உடல் உலகிடைக் காணப்படும் ஆறு வழிகளும் உண்மையுணர்தலாகிய தூய்மை பெறுதல்வேண்டும். ஆறுநிலைகள் - ஆறாதாரம் ஆறுவழிகள் ஆறத்துவா. தூய்மை - சுத்தி. சிவலிங்கத்தின் வகைகளாகிய அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் என்னும் விழுமிய அறுவகை இலிங்கங்களின் இயல்புணர்தல் வேண்டும். இலிங்க வழிபாடே தொன்மைத் தமிழக வழிபாடு. இன்றும் அதற்கே முதன்மை. அத் திருவுருவினுக்கே சிவன் என்னும் திருப்பெயர் வழங்குகின்றோம். இதுவே "சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான் திருவுருவாகும். திருவுரு - படிமை இவ்வாறும் முறையே உலகம், உடல், உலகமுதல், உயிர், உணர்வு, உணர்வருள் ஒண்மைச் சிவகுரு எனக்கொள்ளப்படும். இவ்வாறும் ஒரு புடையொப்பாகச் சிவபெருமானின் அறுவகைப் பண்புகளைக் குறிக்கும் குறிப்பாகும். அறுவகையாவன : ஆக்கம், ஆண்மை, சீர்த்தி, திரு, மெய்யுணர்வு, உறுதி என்பன. இவ்வுண்மை யுணர்வார் சிவலிங்கவழிபாடு எத்துணை விரிந்த பெருநெறி வழிபாடென்பது கண்டு இன்புற்று இறும்பூதெய்துவர். எல்லாம் சிவவண்ணம் என்பதனைச் சொல்லளவினன்றி நல்லாம் செய்யும் செயலளவினும் காண்கின்றோம். அச் செயலால் பண்டை முறையாகக் கொண்டுங் கொடுத்தும் வாழும் குடிப்பிறப்பு (1747) உண்டாகும். இக்குடிப்பிறப்பால் எல்லாம் திருவருள் வைப்பு (1774)
|