பக்கம் எண் :

1299
 

என்னும் இயைபு தோன்றும். பின் அகம்புறமாய் அருளொளி தோன்றும். அத் திருவருள் செயலாற்றோன்றும் சிவபூசையுண்டாம். பூசையின் உயிர் செந்தமிழ்த் திருமுறைத் திருப்பாட்டேயாகும். அதுவே நம்முரிமையுமாகும். அவ்வுண்மை 'வேட்டவி' (1793) என்னும் திருப்பாட்டானுணரலாம். மேலும், 'அருச்சனை பாட்டே யாகும்' என்னும் சேக்கிழாரடிகள் திருமொழியானும் உணரலாம். பூத்தூவி வழிபடும் நாம் அப் பூமரத்திற்குக் கையாளாவோம். பூமரம் ஈன்ற பொருளே பூவாகும். அது தரையில் உதிர்ந்து கிடக்குங்கால் அம் மரம் நேரே செய்த உலக இலிங்க வழிபாடாகும். நாம் எடுத்துத் தொடுத்துத் திருக்கோவிற் சிவலிங்கத்திற்குச் சாத்தில் உலக முதல் இலிங்க வழிபாடாகும். உண்மையான் நோக்கின் அவ் வழிபாடும் அம் மரத்தினையே சாரும். நாம் அம் மரத்தின் கையாளாய் அம் மரம் உய்யச் செய்ய சிவபுண்ணியத்தராவோம். இப்படியே சிவவழிபாட்டிற்குரிய எல்லாப் பொருள்கட்கும் நாம் கையாளேயாவோம். ஆனால் பாட்டு ஒன்று மட்டுமே நம் உரிய உலப்பில் உடைமையாகும். அதனை யாவரும் குறிக்கொண்டு போற்றுமின். அப்பொழுதுதான் 'அருச்சனை பாட்டேயாகும்' என்னும் வைப்பாம் மெய்ப்பொருள் செப்பமுறத்தோன்றும். அருச்சனை - பூசை.

சிவபூசையின் பெறுபேறாகச் சிவகுருவின் பூசை (1817) உண்டாகும். குருபூசைப் பயனாகச் சிவனடியார் வழிபாடு (1824) உண்டாகும். சிவனடியார் எனினும் மகேசுவரர் எனினும் ஒன்றே. சிவனடியார் சிவனோடொப்பர். அவர் பெருமை (1836) அறிந்து அவர்க்கு அடிமையாதலே செந்நெறிச் சிறப்பு. உண்ணுங்கால் தம்முயிர் சிவபெருமான் அமரும் திருக்கோவில் (1848) என்னும் தீந்தமிழ் உண்மையினை உணர்ந்து சிவனினைவுடன் உண்பர். உண்ணும் ஊண் முதல் சிவனுடைமையாதலின் யாண்டும் எப்பொருளையும் அவன்பால் (1851) இரந்துபெற்றே யுண்பர். இஃதொரு பெருந்தவமாகும். இத் தவநிலையை யாமெலாம் மேற்கொள்ளும் பொருட்டு அச் சிவபெருமானே முற்படியாக இரந்து வழிகாட்டி யருளுகின்றனன். முத்திரையெனினும் பொறியடையாளம் எனினும் ஒன்றே. அம் முத்திரைச் சிறப்பினையும் சிவனடியார் உணர்ந்து (1858) ஒழுகுவர். சிவயோகிகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைபோன்று இருக்கும்போதும் உடலோடு இருப்பர். அவர்தம் திருவுடலைக் குகை செய்து கற்றளி எடுத்தலே யாவர்க்கும் (1876) இன்பம் தருவதாகும். குகை - சமாதி. கற்றளி கருங்கல்லாலாகிய திருக்கோவில். விந்துவை வீணாக்குதல் செய்யாது வளர்த்தலே வீறுடைத் (1897) தாகும். விந்தின் அடக்கமாம் வெற்றியால் சிவோகம் (1932) உண்டாகும். பகலவனின் உண்மைநிலை காண்பார் ஒண்மையோராவர். அப் பகலவன் அண்டம், பிண்டம், மனம், ஞானம், சிவன் என ஐவகையாகப்