பகுக்கப்பெறுவன். ஐம்புலன் அடக்கும் அருமையும் முறைமையும் அறிந்தொழுகுவோரே அன்பார் சிவனடியாராவர். சிவகுருவல்லாதார் சிறுமை (2010) யோர்தலே செம்மையாம். சிவகுருவின் சிறப்போர்ந்து வாழ்வதே சிவகதி (2016) யாகும். மறைமுறையாகிய செந்தமிழ் வேதாகமங்களில் விதித்தபடியே ஒழுகுதலுடையோர் திருவடிகூடும் சிவனடியாராவர். அதற்கு மாறாக ஒழுகுவார் சிவனைக் கூடா ஒழுக்கினராவர். கூடா ஒழுக்கினர் (2029) கூடார் திருவடி. இவர்தம் கேடு கண்டு சிவனடியார் பெரிதும் (2052) இரங்குவர். குருமொழியாகிய உறுதி இன்னுரை உற்றாரே சிவபெருமான் திருவடியைக் (2080) கூடியின்புறுவர். ஆகமம் - ஆவியின் நிறைவு. 'முன்னொரு சமயந் தன்னைப் பொருளென முற்றிநின்று, பின்னர் வான் சைவம் எய்தப்பெற்றவர்' நம் திருநாவுக்கரசு நாயனாராவர். ஐந்தாம் தந்திரமே மயலொழிக்கும் இயற்கைச் செந்நெறியின் மாண்பு வகுத்தோதுகின்றது. அதனால் அந் நாயனாருடன் ஒரு புடையொப்புக் கூறும் உண்மை ஒண்மையதாகும். அஃது ஆறாம் தந்திரம் சிவகுருவின் மாண்புரைக்கின்றது. 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தப் பெருமானாரே நம் செந்நெறியினருக்கு முதற்குரவராவர். அவரே இச்சை ஏதும் இன்றிப் பச்சைப் பசுக்குழவிப் பருவத்தே சிவபெருமானைக் கண்டு காட்டியவ (1556) ராவர். அதனால் அந் நாயனாருடன் ஒரு புடையொப்புக் கூறும் ஒண்மையதாகும். ஏழாந் தந்திரம் சிவலிங்க வழிபாடு செப்புகின்றது. சிவலிங்க வழிபாட்டைச் செய்யுமாறு வழிதடுத்தாட்கொண்டு வாழ்வருளப் பெற்றவர் நம்பியாரூரர். அவரையே திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோவிலுக்குள் அழைத்துச் சென்று காட்சியருளி வழிபடுவித்தருளினன் சிவன். அவ் வழிபாடு செந்தமிழாலேயே இருத்தல்வேண்டுமென்பது திருவருளாணை. அவ்வுண்மை வரும் திருமுறைத் திருப்பாட்டான் உணர்க : "மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம் பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே யாகு மாதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார்தூமறை பாடும் வாயார்." (12. தடுத்தாட்கொண்ட புராணம். 70.) இதன்கண் தமிழ்ப் பாட்டால் வழிபாடு செய்யவேண்டுமென்று ஆண்டவன் திருவாணை அருளியும், அவ்வண்ணமே திருமுறைச் செந்தமிழ்ப் பாட்டுத் தோன்றியும் நம்மனோர் அவ்வருளாணையைப் பற்றாது
|