பக்கம் எண் :

1312
 

"நம்பிரான் மூலரடி நாளும் தலைக்கொண்டு
செம்பொருட்சீர் தெந்தமிழித் தேயமெலாம் - தம்பொருளாய்ப்
போற்றத் துணைசெய்யும் பொய்யில் திருத்தொண்டாய்
ஆற்றவருள் தந்ததடி யேற்கு."

"திருமன்னும் மறைமுறையும் தீந்தமிழால் ஞாலம் தேறிவழி பாடியற்றச் செப்பியநம் பெருமான்
திருமூலர் அருளாளர்க் கொருமூலர் வாழ்க செப்புதிரு மந்திரமூ வாயிரமும் வாழ்க
பெருகும்அறம் பொருளின்பம் வீடுடனே பேறு பேற்றுவழி பூசைவழி பாட்டுறுதி வாழ்வு
ஒருநான்கோ டைந்தாந்தந் திரமொன்பான் வாழ்க ஓதிவழி பாடியற்றும் ஒண்மையர்வா ழியவே."

மூவாயிரம் இரட்டுறமொழிதலால் மூவா + இரம் எனக் கொண்டு என்றும் பொன்றாதிருத்தல் எனலுமாம். இரம் - இருத்தல். வருதல் வரம் என்பது போலாம் இது. பூசை - வழிபாடு.

"எம்பிரான் ஞானசம் பந்தர் நாவினுக் கரசரா ரூர்வாழ்
தம்பிரான் தோழரா ரூரர் மணிமொழி யார்தமிழ் நால்வர்
நம்பிரான் மூலரோ டைவர் நற்சிவ யசிவ நல்லார்
ஐம்பெரும் சைவநல் லாசான் அடியிணை வாழிய அன்றே."

திருக்ககற்றும் தொகைமறையில் சிவனருளால் நம்பி செந்தமிழால் எம்பிரான் சம்பந்தன் என்றும் உருக்கமிகு நம்பிரான் திருமூலன் என்றும் ஓதும்உண்மை உய்த்துணரின் ஓரிருவர் தாமும் பெருக்கமிகு செந்நெறியைப் பேணிவளர்த் தாண்ட பெட்புநிறை சிவனாரும் சிவையாரும் ஆகும் சுருக்கமிலாக் கருத்துணர்த்தும் துணைமையதென் றேநாம் தொழுதெழுவோம் வழுவாது துணையடிகள் சேர்ந்தே.

சேர்ந்ததிரு மூலரவர் செந்தமிழால் வையம் சிறந்தோங்கி வாழ்ந்திடவும் செந்நெறியின் மாண்பு ஆர்ந்தஇரு பாலாரும் அகங்கொண்டு போற்றி அன்பருளால் இன்புற்றிங் கடிதொழுது வாழ்த்திக் கூர்ந்தவழி பாடனைத்தும் அத்தமிழால் நாளும் குறிக்கொண்டிங் காற்றிடவும் எண்குணத்தான் தாள்கள் நேர்ந்தமனத் தாற்றொழுது ஐங்குரவர் நீடு நிறைமலர்த்தாள் தலைக்கொண்டு வாழ்ந்திடுவம் மாதோ.