பக்கம் எண் :

1313
 

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாமரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே."

(ஆளுடைய பிள்ளையார், 3. 54 - 1.)

"என்றும் இன்பம் பெருகும் இயல்பினோடு
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்."

(12. வெள்ளானை, 53,)

"ஐந்தெழுத்து நீறுமணி ஐங்குரவர் தந்தமுறை
முந்துசித்தாந் தம்மொடும் வாழ்க."

திருச்சிற்றம்பலம்

அடியார்க்கு அடியன்
திருவள்ளுவரகம்,
ப. இராமநாதன்.