பக்கம் எண் :

58
 

(ப. இ.) நாற்புலத்து முள்ளார் உய்தற் பொருட்டு ஆங்காங்குப் பொருந்திய தலைவரானார்கள். அந் நால்வரும் பல்வேறு வகையான திருவருட் பொருளைக் கைக்கொண்டு அவர்கள் தாம் பெற்றதெலாம் இவ்வுலகம் பெறுக என, அந் நால்வரும் செம்பொருட் சிவத்தை அகந்தழுவியவராய் அதனால் சிவமானவராய்ச் சித்தாந்த முதல்வரானார்கள்.

(3)

132. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

(ப. இ.) திருவாவடுதுறையின்கண் திருமூல நாயனாருடன் இத் திருமந்திர நூலைக் கற்று மாணவர்களாக வீற்றிருந்த நற்றவமுனிவர்கள் எழுவராவர். அவர்கள் கந்துருவனைய நந்தா நிலையினர். அவர்கள் திருப்பெயர் வருமாறு. மாலாங்க முனிவர், இந்திர முனிவர், சோம முனிவர், பிரமமுனிவர், உருத்திர முனிவர், காலாக்கினி முனிவர், கஞ்சமலைய முனிவர் என்ப. இம் முனிவர்கள் எழுவர்களும் தன் வழி வந்தவர்களென இதன்கண் திருமூல நாயனார் அருளுகின்றனர். இஃது அகச்சான்றாகும்.

(அ. சி.) மாலங் . . . . . . . . மலையன் - திருமூலருடைய ஏழு மாணவர்கள் ஆவடுதுறையில் உடனிருந்தவர்கள்.

(4)

133. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்புஞ்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக்1 காட்டகி லானே.

(ப. இ.) இறப்பும் பிறப்பும் இயல்பாகவே என்றும் நீங்கிய சிவபெருமான் மேலோதிய எழுவர்க்கும் என்னுள்ளிருந்து மொழிந்தருளினன். செழுமை மிக்க மாறா ஒளியுடைய அன்பு, அறிவு, ஆற்றல் மூன்றனையும் இயல்பாகவே யுடையவன் சிவன். அவன் தன் திருவடிக் காதலர் அல்லாதார்க்கு எல்லையில்லாத தன்பெருமையைக் காட்டுந் தன்மையன் அல்லன். அன்பு அறிவு ஆற்றல்: இச்சை, ஞானம், கிரியை. கழிந்த - எல்லையில்லாத. மூன்றொளி என்பதற்கு ஞாயிறு திங்கள் தீ எனலும் ஆம்.

(5)

134. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறா யிருந்து2 துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.


1. அம்பரமாம். 8. திருச்சாழல், 19.

2. சிரிப்பார். 8. கோயின்மூத்த. 9.