பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை10

கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்

காலுயர் வட்டணை யிட்டு நட்டம்

அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

7


9. நாடும், நகரும் திரிந்து சென்று,

நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்ட மாடே,

முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்

காடும், கடலும், மலையம், மண்ணும்,

விண்ணும் சுழல அனல்கை யேந்தி

ஆடும் அரவப் புயங்கன் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

8


பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஒன்று. தடி - தசை. அணங்கு ஆடுதல் - தெய்வம் வந்ததுபோல ஆடுதல். ‘காட்டில், ஓரி கதிக்க, கால் வட்டணையிட்டு நட்டம் ஆடும் அப்பன்’ என்க. ஓரி - நரி. கதிக்க - குதிக்க (நட்டம்) அழல் உமிழ்தல், வெப்பத்தை வீசுதல். “உமிழ்ந்து” என்பதை, ‘உமிழ்’ எனத் திரித்துக் கொள்க.

9, அ. சொ. பொ.: நயத்தல் - விரும்புதல். “பிணம்” என்றது, பிணமான நிலையை, ‘பிணத்து மூடி’ என மாற்றி, ‘பிணமாய்விட்ட நிலையில் அவர்களைத் துணியால் மூடி மறைத்து’ என உரைக்க. மாடு - பக்கம்; இடம் ‘பிணத்தை இட்ட இடம்’ என்றதனால் அது, ‘முதுகாடு’ என்றதாயிற்று. ‘இட்ட மாடே ஆடும் ‘புயங்கன்’ என இயைக்க, முன்னிய - பலவற்றைக் கருதிய. அரவப் புயங்கன் - பாம்பை யணிந்த கூத்தன். ‘புயங்கம்’ என்பது ஒருவகைக் கூத்தாயினும், அஃது இங்குப் பொதுப் பொருளே தந்தது; என்னை? இறைவன் காட்டில் ஆடுவது எல்லா நடனங்களையும் ஆதலின். ‘காடு, கடல், மலை, மண்’ என்பன, ‘முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம்’ என்பவற்றைச் சுட்டியவாறு ‘நன்னெறி நாடி நயந்த வரை இட்ட இடம்’ என்றது. ‘தீயோர் மட்டுமன்று; நல்லோருந்தாம் அடையும் இடம் அது’ என்றபடி. எனவே, ‘எங்கள் அப்பன் ஆடும் இடத்தை அடையாதார் எவரும் இல்லை’ என்பது உணர்த்தும் முகத்தால், ‘அவனே அனைத் துயிர்க்கும் புகலிடம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாம். தொல்காப்பியரும், “பலர் செலச் செல்லாக் காடு”-1 என்பதனான் இப்பொருளை இங்ஙனமே குறிப்பாற் சுட்டினார்.


1. தொல் - பொருள் - புறத்திணையியல் - காஞ்சி.