10. | துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம் | | உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச் | | சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, | | தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, | | மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல் | | தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து) | | அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள் | | அப்ப னிடம்திரு ஆலங் காடே. | | 9 |
11. | புந்தி கலங்கி, மதிம யங்கி | | இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் | | சந்தியில் வைத்துக் கடமை செய்து | | தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா | | முந்தி அமரர் முழவி னோசை | | திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, | | அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் | | அப்ப னிடம்திரு ஆலங் காடே. | | 10 |
10. அ. சொ. பொ,: “ஓசை” என்றதனை, ‘குரல்’ எனக் கூறியதாகக் கொண்டு, ‘துத்தம்’ முதலிய ஏழும் ஏழிசை களின் பெயர் என உணர். இந்த ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமாற்றால் பண்கள் பிறக்கும் ஆதலின், இவைகளை, “பண் கெழுமப் பாடி” என்றார். கெழும - பொருந்த. சச்சரி முதல் மொந்தை ஈறாகக் கூறப்பட்டவை வாத்திய வகைகள். ‘கைக்கிளை’ என்பது விரித்தல் விகாரம் பெற்றது. வன் கை மென்தோல் தமருகம் - வலிய இரு பக்கங் களிலும் மெல்லிய தோலையுடைய உடுக்கை. அத்தனை விரவி னோடு. ‘அத்தனை வாத்தியங்களின் ஒத்திசையோடு ஒத்து நிகழ ஆடும் எங்கள் அப்பன்’ என்க. “சச்சரி” இன எதுகை “வாசித்து” என்பதனை, ‘வாசிக்க’ எனத்திரிக்க. இதன்கண் அம்மையார் இசைக் கலையின் சிறப்புகளைப் புலப்படுத்தினமை காண்க. ‘புயங்கன்’ முதலிய சொற்களால் பரதக் கலையைப் புலப்படுத்தி, ‘அனைத்துப் பரதங்களையும் ஆடும் பெருமானே வல்லவன்’ என்பதனைப் புலப்படுத்தலும் அம்மையாரது திருவுள்ளம் என்க. 11. அ. சொ. பொ.: புந்தி - புத்தி, மதி - அறிவு. “கலங்கி, மயங்கி” என்றது, இறப்பு வருங் காலத்து நிகழ்வன வற்றைக் கூறியவாறு. சந்தி, உறவினர் நண்பர்களது கூட்டம். கடமை, ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்; புதல்வர் முதலானோர். தீ, பிணத்திற்கு இட்ட தீ. ‘அதுவே விறகாய் இருக்க ஆடுகின்றான்’ என்க. அவ்வாட்டத்தை மக்கள் காணார் ஆகலான், அதற்கு அமரர்களே
|