பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை12

12

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,

ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்க லித்து,

பப்பினை யிட்டுப் பகண்டை பாட,

பாடிருந் தந்நரி யாழ மைப்ப,

அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்

அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்

செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்

சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.

11

திருச்சிற்றம்பலம்


வாத்தியம் வாசிப்பா ராவர். முழவு - மத்தளம், திசை கதுவ - திசைகளை உள்ளடக்கி நிகழ. அந்தி, மாலைக் காலம், மா நடம், நெடிது நிகழும் நடனம்.

12. அ. சொ. பொ.: “ஒப்பினை” என்பதில் ஐ, இரண்டாம் வேற்றுமை யுருபு. ‘இல்லாதனவாகிய வலிய பேய் கள்’ என்க. ‘ஒக்கக்கலித்து’ என்பது, ‘ஒக்கலித்து’ எனக் குறைந்து நின்றது. ‘ஒரு சேரக் கூச்சலிட்டு’ என்பதாம். “பகண்டை” மேலேயும் (பாட்டு - 6) கூறப்பட்டது. பாடு - பக்கம். “அந்நரி” என்பதில் அகரம் பண்டறி சுட்டு. ‘காரைக்காலில் தோன்றிய தாகிய இந்தப் பேய், மற்றைப் பேய்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு ஆரவாரிக்கின்ற ஆரவாரத்தின் இடையே, நரியின் குரலையே யாழிசையாகக் கொண்டு பகண்டைகள் பாட, அந்தப்பாட்டோடு ஆலங்காட்டுள் அடிகளைச் செப்பிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாகப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்’ என முடிக்க.

அம்மையார் தாம் உலக வாழ்வில் வாழ்ந்த காலத்திலும், ‘சிவபெருமானே யாவர்க்கும் உண்மை அப்பன்’ என்று உணர்ந்து, ‘அப்பா! அப்பா!’ என்று சொல்லி வந்து, கயிலை யிலும் பெருமான் ‘அம்மையே’ என்று அழைக்க, தாம், ‘அப்பா’ என்று அழைத்தபடியே, இத்திருப்பதிகத்திலும், “எங்கள் அப்பன், எங்கள் அப்பன்” எனப் பலமுறை சொல்லி இன்புற்ற மையைக் காணலாம்.

உலக மக்கள் எளிதில் உணரத் தக்கதாக, ‘சிவன் இங்குள்ள சுடுகாடுகளிலே அங்குள்ள பேய்கள் சூழ அனலிடை. ஆடுகின்றான்’ எனப் பெரியோர் பலரும் ஒரு படித்தாகக் கூறிவந்த போதிலும் அதன் உண்மைப் பொருள், ஊழியிறுதிக்கண் உலகெலாம் ஒடுங்கியுள்ள பொழுது, உடம்பும், கருவிகரணங்களும் ஆகியவற்றுள் ஒன்றும் இன்றி இருளிற் கிடக்கும் உயிர்களை மீள உடம்போடும், கருவி கரணங் களோடும் கூடப் படைத்துக் காக்க வேண்டியவற்றிற்கு