பக்கம் எண் :

13மூத்த திருப்பதிகம் - 1

ஆவனவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனத்தைச் செய்கின்றான்’ என்பதேயாகலின், ‘அந்த உண்மையை உணர்ந்து இப்பதிகத்தினைப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்கள்’ என்பதாம். இவ்வுண்மையை உணராதவர்கள் எல்லாம், ‘சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்’ எனச் சொல்லி இகழ்வார்கள் என்பதை அம்மையார் தமது அற்புதத் திருவந்தாதியில்,

‘இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்’1

என அருளிச் செய்வார். பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யும் ஞானசம்பந்தர்க்கு முன்பே அம்மையார் அது செய்தமையை அவரது திருமொழிகள் பலவற்றிலும் காணலாம்.

மூத்த திருப்பதிகம் - 1 முற்றிற்று

* * *


1. வெண்பா - 29