காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த மூத்த திருப்பதிகம் - 2 தலம் மேலது, பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 13. | எட்டி, இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. | 1 |
14. | நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய் துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச் சுடலை நவிழ்த் தெங்கும் கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய் அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. | 2 |
13. இப்பதிகத்தின் பண்ணாகிய இந்தளமே சுந்தரர் முதற் பதிகத்தின் பண்ணாய் அமைந்துள்ளது. அ. சொ. பொ.: எட்டியும், இலவமும் மர வகைகள். ஈகையும் சூரையும் கொடி வகைகள். காரை, செடி. “படர்ந்து” என்றது இரட்டுற மொழிதலாய், ‘பரவி’ என்னும் பொருளையும் தந்தது. சுட்ட - பிணங்களைச் சுட்ட. ‘சுட்ட சுடலை எங்கும் எட்டி முதலியன பரவி, சூழ்ந்த கள்ளிகள் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள்’ என்க. பறைபோல் விழி - அகன்ற கண்கள். ‘காட்டில் பேய் முழவங் கொட்ட, கூளி பாடக் குழகன் ஆடும்’ என வினை முடிக்க. கூளி - பூதம். குழகன் - அழகன். 14. அ. சொ. பொ.: நிணம், துணங்கை இவை மேலே கூறப்பட்டன.1 நிணம் உருகுதல் பிணஞ்சுடு தீயால், சூழும் நோக்கி - சுற்றிலும் பார்த்து. ரூவிழ்த்து - விரும்பி. ணூணங்கள் - பேய்க் கூட்டம். மாந்தி - உண்டு களித்தல் - மயங்குதல். அணக்கு - துன்பம் தருகின்ற. “தான்” இரண்டும் அசைகள்.
1. பாட்டு 6, 8
|