15. | புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ அட்கென் றழைப்ப, ஆந்தை வீச, அருகே சிறுகூகை உட்க விழிக்க, ஊமன் வெருட்ட, ஓரி கதித்தெங்கும் பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே. | 3 |
16. | செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக் கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே. | 4 |
15. அ. சொ. பொ.: புட்கள் - பின்னர்க் கூறப் படுவன தவிர ஏனைய காக்கை, பருந்து முதலியன. பொதுக்கல் குத்துதல். ‘அட்கு’ என்பது ஒலிக்குறிப்பாதலை, அதனை அடுக்கிக் கூறியறிக. அழைத்தல், தன் இனத்தை. ‘சிறகை வீச’ என ஒரு சொல் வருவிக்க. உட்க - அஞ்சும்படி, ஊமன் - பெரிய கூகை, ஓரி, நரி வகைகளில் ஒன்று. கதித்தல் - ஓடுதல். பிட்க - பிளவு செய்ய. ‘நட்டம் பெயரும்’ என இயைக்க. பேணும் - யாவாரிலும் வழிபடப்படும் இறைவன்; சிவன் பெயர்தல், அடி பெயர்த்து ஆடுதல். ‘பெயரும் பெருங்காட்டில்’ என ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. ‘வெண்தலையை நரி கௌவுதற் பொருட்டுத் தன் இனத்தை ‘அட்கு’ என்று கூச்சல் இட்டு அழைக்கக் கண்டு, ஆந்தை சிறிய சிறகை வீச கூகை, அச்சம் உண்டாகும்படி கண்களை விழித்துப் பார்க்க, பெரிய கூகை தனது குரலால் வெருட்ட, இந்நிலையிலும் ஓரிகள் ஓடித் தசையைப் பிட்டுத் தின்னல் நிகழுகையில் இறைவன் பெருங்காட்டில் ஆடுகின்றான்’ என்றபடி. 16. பொழிப்புரை: உயிர் நீங்கியதனால் பிணமாம் நிலையை அடைந்த உடம்பை அதன் உண்மையை அறியாமல் ‘படுத்துக் கிடக்கின்ற ஆள்’ என்று நினைத்து ஒரு பேய் அதன் அருகிற் சென்று தனது சுட்டு விரலைக் காட்டி, உரக்கக்கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதன் கருத்தையே ‘மெய்’ என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓட, (இத்தன்மையதாய் இருக்கின்ற காட்டில்) பெருமான் தானும் ஒரு பித்தன்போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான். “பிணம்” என்றது, ‘உடம்பு’ என்னும் அளவாய் நின்றது. விரலைக் காட்டிக் கத்தி உறுமியது கிடக்கின்ற ஆளை அச்சுறுத்தற்கு. பத்தல், வீணைத் தண்டு பொருத்தப்பட்டுள்ள குண்டுப் பகுதி ‘அது
|