17. | முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே. | | 5 |
18. | வாளை கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில் தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய்அழல்கட்பேய் கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே. | | 6 |
போலும் வயிறு’ என்க. ‘ஒரு பேய், தெரியாது சென்று, சுட்டி, கத்தி, உறுமி, எறிந்து கடக்க, பல பேய் பாய்ந்து போய் வயிற்றை மோதி இரிந்து ஓட பெருமான் ஆடும்” என வினை முடிக்க. 17. அ. சொ. பொ.: முள்ளி - முள்ளை யுடைய செடிகள், முளரி - தீ. அஃது இங்கு அதனை யுடைய விறகைக் குறித்தது. வெள்ளில் - விளா மரம். பிறங்குதல் - விளங்குதல். முள்ளிகள் தீந்து போயதும், கள்ளி பால் வற்றியதும் பிணங்களைச் சுடுகின்ற தீயால். எரிகின்ற விறகு கரிந்து போயது, பிணங்களின் மூளை சொரிதலால். உகுதல் - சிந்துதல். விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது’ என்க. உழை, ஒருவகை மான். உழை மான், இருபெயர் ஒட்டு. பியல் - தோள். பியற்கு, பியலின்கண்; உருபு, மயக்கம். பள்ளி இடம் - நிலையாக இருக்கும் இடம். அதுவே - அந்தக் காடே. உம்மை, சிறப்பு. எண்ணின் கண் வந்த செய்தென் எச்சங்கள், “பிறங்கு” என்னும் ஒருவினை கொண்டு முடிந்தன. 18. அ. சொ. பொ.: “வாளை” என்பதில் ஐ - சாரியை. வாள், அதன் வடிவைக் குறித்தது. கிளர்தல் - விளங்குதல். “எயிறு” என்றது அலகினை வளை - வளைந்த, வாள் - ஒளி. வாளின் வடிவு விளங்குகின்ற, வளைந்த, ஒளி பொருந்திய அலகு என்க. முரலுதல் - மூக்கால் ஒலித்தல். தாளிப்பானை, விரிந்த மடல்களையுடைய ஒருவகைப் பனை. ஓலையை, “இலை” என்றது மரபு வழுவமைதி. கட்டு அழல் மிகுந்த நெருப்பு. அழல் வாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். அழல் கண் பேய் - கொள்ளிக் கண் பேய். கூளி - பூதம். குழலோடு இயம்புதல் - குழலை ஊதித் தாமும் இசைத்தல். ‘குழகன்’ மேலே சொல்லப்பட்டது.1
1. பாட்டு 13.
|