| புழுதி துடைத்து, முலைகொ டுத்துப் | | போயின தாயை வரவு காணா(து) | | அழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் | | அப்ப னிடம்திரு ஆலங் காடே. | | 5 |
7, | பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் | | பருந்தொடு, கூகை, பகண்டை, ஆந்தை | | குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் | | குறுநரி சென்றணங் காடு காட்டில் | | பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட | | பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே | | அட்டமே பாயநின் றாடும் எங்கள் | | அப்ப னிடம்திரு ஆலங் காடே. | | 6 |
8. | சுழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய் | | சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித் | | தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் | | தான்தடி தின்றணங் காடு காட்டில், |
‘கழுது தன் பிள்ளையை, நிணத்தை விழுங்க நிணம் - திரட்டி எடுத்து உருண்டையாகிய கொழுப்பு. ‘கழுது தன் பிள்ளையை, நிறத்தை விழுங்க இட்டு, வெண்தலை மாலை பூட்டி, புழுதி துடைத்து, முலை கொடுத்து, - காளி - என்று பேர் இட்டுச் சீருடைத்தா வளர்த்து, (சிறிது நேரம் விட்டுப்) போயினதாக, அத்தாயை வரவிற் காணாது, பிள்ளைப் பேய் அழுது, பின் உறங்கும் புறங் காடு’ என இயைத்துக்கொள்க. ‘போயினதாக’ எனவும், ‘அத்தாய்’ எனச் சுட்டும் வருவித்துக்கொள்க. ‘விழுங்கியிட்டு’ என்பது பாடம் அன்று. 7. அ. சொ. பொ.: ‘அணங்கு ஆடு காட்டில் கூகைப் பேய்களும், குறு நரிகளும் குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பாறுகாற் பேய்கள் சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்டபிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாய்ந்து ஓட ஆடும் எங்கள் அப்பன்’ என இயைக்க. பட்ட அடி - பரந்துபட்ட பாதம். அகரம் தொகுத்தல். நெட்டுகிர் - நீண்ட நகம். பாறுதல் - வற்றுதல். பகண்டை ஒருவகைப் பறவை. கூகைப் பேய்கள், பேய்களில் கூகையாய் உள்ள பேய்கள் அணங்கு, தாக்கணங்குகள் (தீத்தெய்வங்கள்) அட்டம் - குறுக்கு. 8. அ. சொ. பொ.: துணங்கை - இரு கைகளையும் மடக்கி இரு விலாக்களிலும் அடித்துக் கொண்டு ஆடும் கூத்து. இது
|