பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை8

5. குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்

குறுநரி தின்ன, ‘அதனை முன்னே

கண்டிலம் என்று கனன்று பேய்கள்

கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா

மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,

வாதித்து, வீசி எடுத்த பாதம்

அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே. 

4


6. விழுது நிணத்தை விழுங்க விட்டு,

வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று

பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்


நாள் - நள்ளிரவு. “நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்”1 எனப் புறப்பாட்டிலும் வந்தது. ஐ, சாரியை, ஆண்டலை, மனிதன் தலைபோலும் தலையை யுடைய ஒருவகைப் பறவை. கோடு - மரக்கிளை. கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின்மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்றது. வீசுதல் - எழுச்சியுறுதல். ஈகை - இண்டங் கொடி - ‘ஈகை வீசிப் படர்கின்ற, தொடர் கள்ளி யின் நீழலை யுடைய சுடுகாடு’ என்க. மற்றும், ‘ஈமம் இடு சுடுகாடு’ எனவும் கொள்க. ஈமம் - பிணஞ்சுடும் விறகு. ‘கூகை முதலிய பறவைகளின் செயல் ஒருபாலாக, ஈமம் ஒருபால் இடப்படுகின்றது’ எனக் கொள்க. “ஆகம் குளிர்ந்து” என்பதற்கு, மேல், “அரங்கம் குளிர்ந்து” என்றதற்கு உரைத்தது உரைக்க. ஆகம் - உடம்பு. ‘நடு நாள் சுடுகாட்டகத்தே, பாட, ஓட ஆடும் எங்கள் அப்பன்’ என இயைத்துக் கொள்க.

5. அ. சொ. பொ,: குண்டின் ஓமக் குழி - ஆழத்தை உடைய ஓம குண்டம். இது சுடுகாட்டில் இறுதிக் கடனுக்காகச் செய்யப்படுவது. “வாங்கி” என்றது, ‘யாவரும் போகட விட்டுப் போனபின்பு எடுத்து’ என்றதாம். முன்பு கண்டிலோம் - முன்பே பார்க்கவில்லையே. (பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று) மண்டபம் - வட்டமாகச் சென்று ஆடுதல். உள்ளாளம், ‘ஆளத்தி’ எனப்படும். அஃதாவது குரலால் இசை கூட்டுதல். வாதித்து - காளியோடும் வாதம் புரிந்து ‘எடுத்த பாதம்’ என்க. எடுத்த பாதத்தை அண்டம் உற நிமிர்ந்து ஆடினமையால், காளி நாணம் அடைந்து தோற்றாள். ‘நிமிர்ந்து’ என்பதும் பாடம்.

6, அ, சொ, பொ,: கழுது - பேய். விழுது நிணம் - திரட்டி எடுத்த உருண்டையாகிய கொழுப்பு.


1. புறம் - 189.