பக்கம் எண் :

7மூத்த திருப்பதிகம் - 1

3.கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

விள்ள எழுதி, வெடுவெ டென்ன

நக்கு, வெருண்டு விலங்கு பார்த்துத்

துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்

சுட்டிட முற்றும் சுளிந்து பூழ்தி

அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங்காடே.

2


4.வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப,

மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே

கூகையொ டாண்டலை பாட ஆந்தை

கோடதன் மேற்குதித் தோட வீசி

ஈசை படர்தொடர் கள்ளி நீழல்

ஈமம் இடுசுடு காட்ட கத்தே

ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

3


எங்கேனும் போய்விட ஒரு பெண் பேய் தனித்து நின்று அலறுதலும் உண்டு என்க. அங்கம் - திருமேனி. அனல் ஆடுதல் - சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல். ‘இவ்வாறு ஆடுபவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியபபு’ என்றபடி.

3. அ. சொ. பொ.: கள்ளிக் கவடு - கள்ளி மரத்தின் கிளைகள். கடைக் கொள்ளி - எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை. வாங்குதல் - எடுத்தல். மசித்தல் - மசிய அரைத்தல். ‘பேய்கள் கண்ணில் எழுதுகின்ற னம கரியே ‘என்றபடி. எனவே, ‘இவ்வாறு செய்வனவும் பெண் பேய்களே’ என்பது விளங்கும். விள்ள - கண்ணினின்று வேறு தோன்ற. ‘வெடு வெடு’ என்பது சினக் குறிப்பு. எனவே, நகுதல் கோபச் சிரிப்பாயிற்று. (வெருளுதல், தம்மை வெருட்டும் பேய்கள் கடுந் தெய்வங்கள் முதலியனவற்றை நினைத்து.) ‘விலங்காக’ என ஆக்கம் வருவிக்க. விலங்காகப் பார்த்தல், நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தல். ‘பிணஞ்சுடு தீச் சுட்டிட’ என்றபடி. சுளித்தல் - கோபித்தல். பூழ்தி - புழுதி. இது ‘பூமி’ என்றும் வரும். அவித்தல், தன்னைச் சுட்ட தீயை.

4. அ. சொ. பொ.: வாகை - காட்டு வாகை மரம். விரிந்து (விரிய) - தழைத்திருக்க. நெற்று வெண்மையாயது காய்ந்து போனமையால். மயங்கு இருள் - மாலைக் காலத்தில். பகலோடு வந்து பொருந்திய இருள். அது பின் மிகுதலின், “கூர்” என்றார். நடு