பக்கம் எண் :

1007பதினொன்றாந் திருமுறை

பேரிளம் பெண் பகுதியில் ஐம்புல இன்பமும் இப்பெண்ணிடத்தே உள்ளன என்பதைத் திருக்குறள் வழியே உணர்த்துகின்றார்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உளஎன்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள்

என்பது அப்பகுதி.

திருமால் சிவனுக்குப் புருஷ சக்தியாவார். அவர் பெண் அம்சம் என்பதை உந்தித் தாமரையில் பிரமனைத் தோற்றுவித்தமையாலும், வலப்பக்கம் கீழ் வைத்துப் பள்ளி கொண்டிருப்பதாலும், உமாதேவியின் சகோதரர் என்பதாலும், மோகினி அவதாரம் எடுத்தமையாலும் தெளியலாம். ஒவ்வொரு சீவராசிகளின் உடம்பிலும் வலப்பக்கம் ஆண்தன்மையும், இடப்பக்கம் பெண்தன்மையும் உள்ளன. சிவன் ஆண் தன்மையும், திருமால் பெண்தன்மையும் உள்ளவர்கள். இதனைப் பொன்வண்ணத்தந்தாதி ஆறாம் பாடலில் அறிவிக்கிறார்.

இடம்மால் வலம்தான்; இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை;
வடம், மால் இடம்துகில் தோல்வலம்; ஆழிஇடம் வலம்மான்;
இடம்மால் கரிதால் வலம்சேது; இவனுக்(கு) எழில்நலம்சேர்
*குடம்மால் இடம்; வலம் கொக்கரை யாம்; எங்கள் கூத்தனுக்கே

இதே கருத்தைப் பேயாழ்வாரும் பாடியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. அப்பாடல் வருமாறு,

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.

“பிறைதங்கு சடையானை வலத்தேவைத்து” என நம்மாழ்வாரும் பாடியுள்ளமை காண்க. இதே தத்துவத்தை மணிவாசகர் அம்மையப்பர் மீது வைத்துப் பாடியுள்ளார்.

வலப்பால் அப்பனும், இடப்பால் அம்மையுமாயுள்ள திருவுருவே பழமையானது. இன்றும் அத்தத்துவம் பொய்க்கவில்லை. அப்பனுக்குரிய தோலும், அம்மைக்குரிய துகிலும் முதலிய அணிகளை அறிவிப்பதன் மூலம் இறைவனின் அம்மையப்பராக உள்ளதொன்மைக்