சேரமான் பெருமாள் சுந்தரரோடு சிலநாள் திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல்பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார். பிரிவும் நினைவும் சில நாட்கள் சென்றன. சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்துப் பிரியா விடை பெற்றார். சேரமான் தம் மாளிகையிலுள்ள பெரும் பொருளைப் பொதி செய்து அளித்துச் சுந்தரரை வழியனுப்பி வைத்தார். திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நெடுநாட்களுக்குப் பிறகு சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றார். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். சுந்தரர் கயிலை சென்றது ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சன மாடிக்கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவரை வணங்கி, 'தலைக்குத் தலைமாலை' என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அந்நிலையில் அவரது பாசத்தளையைப் போக்கிப் பேரருள் புரிய விரும்பிய பெருமான் இந்திரன் முதலிய தேவ கணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணிக்கத் தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்றுச் சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின்மேல் ஏறி 'தானெனை முன் படைத்தான்' என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார். அழையாமல் வந்ததேன் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்தகுதிரை
|