| 236. | அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழலுமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தார் பரவும் புகழண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடரின்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே | | 68 |
| 237. | பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும் நீறும் மருவலுற்றோ கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாயர வாடலுற்றோ குறைக்கொண் டிவளரன் பின்செல்வ(து) என்னுக்குக் கூறுமினே. | | 69 |
அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற, திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் உள்ளன. குறிப்புரை: மாலையுவமை. திங்கட் கதிரால் நீர் வெண்ணிறம் பெற்றது. இது சிவபெருமானது தலைக் கோலத் தைப் புகழ்ந்தவாறு. 236.பொழிப்புரை: எங்கள் கடவுளாகிய சிவபெருமான் முடியில் சூடியுள்ள வெள்ளிய பிறை, அங்குள்ள பாம்பு தன்னை நோக்கிச் சீறும்பொழுது தான் கோபத்தால் தணலாய் எரியும். அங்குள்ள அழகிய கங்கை பாயும்பொழுது குளிர்ச்சி யடையும். குராமலரைச் சூடியுள்ள கூந்தலையுடைய உமையவள் ஊடல் கொள்ளும் பொழுது, தன்னை அடைந் தோரால் துதிக்கப்படுகின்ற சிவபெருமான் (உமை அறியாதபடி) தன்னைக் கையால் தீண்ட, தான் நைந்து உருகி உமையவள்மேல் தனது கதிர்களைப் பொழியும். மற்றைய நேரங்களில் நிலத்தையும், வானத்தையும் இருள் நீங்கி ஒளி பெற்று விளங்கச் செய்யும். ஆகவே, அது துன்பத்தையும் இன்பத்தையும் மாறி மாறி அடைவதாகின்றது. குறிப்புரை: திங்களின் கதிர்கள் காதலை மிகுவித்தலால் உமையவள் ஊடல் தணிவாளாவள். அதன் பொருட்டுத் திங்களைத் தூண்டச் சில சொற்களைச் சொல்லின் உமை மேலும் வெகுள்வாள் ஆதலின், குறிப்பால் தூண்டச் சிவபெருமான் தனது கையால் தீண்டுவான் என்க. இவ்வாறு செய்தல் உலக வழக்கம். இது சிவபெருமானது தலைக் கோலத்துள் பிறை ஒன்றனையும் புகழ்ந்தவாறு "வளாய்" என்பதனை 'வளாவ' எனத் திரிக்க. 237.பொழிப்புரை: (மகளிர்) இவள் (தலைவி) சிவன் பின்னே குறையிரந்து செல்லத் துணிந்தது அவன் சூடியுள்ள பிறையைத் தான்
|