பக்கம் எண் :

141பொன்வண்ணத் தந்தாதி

238.கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத்(து) இருமின் விருந்தாய் இமையவர்க்கே.

70



சூட விரும்பியோ? (அவனுடன் சென்று) பிச்சை ஏற்றுப்பின் அவனோடு கூடத் தீயில் நின்று ஆட விரும்பியோ? அவனோடு இணைந்து கண்டத்தினின்றும் சாமவேதம் பாடவிரும்பியோ? அவன் அணிகின்ற எலும்பு மாலையையும், பூசுகின்ற சாம்பலையும் தானும் அணியவும், பூசவும் விரும்பியோ? அவனுடைய கருமையான கழுத்தைக் கட்டித் தழுவ விரும்பியோ? அவன் தன்மேல் ஆடவிட்டுள்ள நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்புகளைத் தன்மேலும் ஆட விட்டுக்கொள்ள விரும்பியோ? 'எதனை விரும்பி' என்பதை எனக்கு நீவிர் கூறுமின்.

குறிப்புரை: இது, செவிலி தலைவியது வேறுபாடு கண்டு இரங்கி ஆயத்தாருடன் கூறியது. அவளால் காதலிக்கப்பட்ட சிவனைச் செவிலி தலைவியை ஆற்றுவித்தற்கு இயற் பழித்துக் கூறினாள். மெய்யுணர்வில்லாதார் சிவனது கோலங்களை இகழ்தலைக் குறித்தல் இதன் உள்ளுறை.

இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.1

என மேல் வந்த அம்மை திருவாக்கினைக் காண்க. "செல்வது" என்பது எதிர்காலம் ஆதலின் அது செல்லத் துணிந்தமை யையே குறித்தது. பின்செல்லல், வழிப்படுதலைக் குறித்த குறிப்பு மொழி. 'இது துணிந்தவள் உடன் போக்கிற்கும் உடன் படுவாள்' என்பது கருத்து.

238.பொழிப்புரை: (உலகீர்; நீவிர் நும்செயல்களை விடுத்து,) சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணிவிடைகளைச் செய்யுங்கள். (அன்பினால் நீர் துளித்தலால்) கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; 'சிவனே முதல்வன்' - என அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள் இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறி தினராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற்கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.



1. அற்புதத் திருவந்தாதி - 29.