| 239. | இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்(டு) ஏந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமக ளாயணைந்தே எமையா ளுடையான் தலைமகளாஅவங் கிருப்பவென்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே. |
| 240. | உறைகின் றனரைவர் ஒன்பது வாயிலோர் மூன்றுளவால் மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை |
குறிப்புரை: குற்றேவலே கிரியா பூசையாகச் சொல்லப்படுகின்றது. "ஏறுமின்" என்றது குறிப்புருவகம். உலகியலில் நிற்போரை நோக்கிக் கூறினார் ஆகலின், 'அவரது விருப்பமும் இவற்றால் நிறைவுறும்' என்றற்கு. "வானத்து விருந்தாய் இருமின்" என்றார். 'சிவ வழிபாடே எல்லாப் பயன்களையும் தரும்' என்பது கருத்து. 239.பொழிப்புரை: (கங்கையானவள் தான் வானுலகத்திலே இருக்கவும்) தேவர்கள் கொணர்ந்து நிலத்திலே இறக்கிவிடத் தன் தன்மை கேட்டு, ('ஆகாயகங்கை' என்னும் சிறப்பு நீங்கி,) ஓர் அரசன் பின்னேசென்று, தனக்கு ஏற்றபுடைத்தாகாத வழியிலே நடந்து, பின்பு ஓர் ஆழமான ஆற்றுவடிவத்தை அடைந்து, தனது கரையில் எம்மை ஆளுடையானாகிய சிவன் தலைவனாய் வீற்றிருக்க, அதனால் அவன் தேவி உமையவள் தலைவியாய் இருத்தலால் அவளுக்குக் கீழே ஓர் உறைவிடம் பெற்றோ இருப்பது! (இஃது என்ன முறை!) குறிப்புரை: சிவன் ஆகாய கங்கை மண்ணில் வந்து காசியில் சிறந்த புண்ணிய நதியாய் இருக்கச் செய்து, அதன் கரையில் தானும், தன் தேவியும் வீற்றிருந்து அங்குச் சென்ற அந்தக் கங்கையில் முழுகித் தன்னை வழிபட்டவர்களது பாவங்களைப் போக்குதலும், இறந்தவர்களுக்கு வீடுபேற்றைத் தருதலும் ஆகிய அருட்செயல்களைக் கங்கையின் பொருட்டு இரங்குவார் போலக் கூறியவாறு. காசிக் கங்கை நதியின் பெருமையும் இதனால் குறிக்கப்பட்டது. "ஏந்தல்" என்றது பகீரதனை. அமையா நெறி, தரை வழி. பகீரதன் கங்கையைக் கொணர்ந்த வரலாற்றினை இராமாயணம் முதலியவற்றிற் காண்க. "இமையோர்" என்பது பிரமன் ஆணையைப் பெற்ற தேவர்களை. 'கெட்டு, ஆய் அணைந்து, உறைகின்றது' - என்ப வற்றிற்கு, 'கங்கை' என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. "சலமகளாய்" என்றது, 'நதி வடிவாய்' என்றபடி. 240.பொழிப்புரை: (உலகீர்) விரிந்து கிடக்கின்ற தோலாகிய கூரை வேய்ந்த சிறு குடிலாகிய இந்த உடம்பில் அக்கூரையால் எலும்பும், நரம்பும், இறைச்சியும், குருதியும், மச்சையுமாகிய கட்டுப் பொருள்கள் வெளித்தோன்றாது மறைந்து கிடக்கின்றன. (வெளித்
|