| பறைகின்ற தோல்போர் குரம்பை பயனில்லை போயடைமின் அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே. | | 72 |
| 241. | அடிக்கண்ணி கைதொழு தார்க்(கு)அகன் ஞாலங் கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைக் கடிக்கண்ணி யாயெமக்(கு) ஓரூர் இரண்டகங் காட்டினையால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே. |
தோன்றினால் அருவருப்பைத் தரும்.) இந்தச் சிறுகுடிலுக்கு வாயில்களோ ஒன்பது உள்ளன. (ஆகவே பாதுகாப்பில்லை.) இதில் பண்டங்கள் மூன்றே உள்ளன. அவைகளை முன்னிட்டு இதில் ஐந்துபேர் வாழ்கின்றனர். (ஆகவே, இதில் உங்கட்குப் பயன் எப்படிக் கிடைக்கும்?) கிடையாது, ஆகையால், ஒலிக்கின்ற, தெளிவாகிய நீரைச் சிவந்த சடையிலே வைத்துள்ள சிவபெருமானது மலர்போலும் திருவடிகளை நோக்கிச் சென்று, அவற்றையே அடைமின்கள். குறிப்புரை: ஐவர் - ஐம்புல ஆசைகள். மூன்று - வாத பித்த சிலேத்துமங்கள். மச்சை - பித்த நீர் "போர் குரம்பை", இறந்த கால வினைத் 'தொகை குரம்பையில்' என உருபு விரித்து, 'என்பு முதலியன மறைகின்ற' என்க. மறைகின்ற, அன்பெறா அகர ஈற்றுப் பலவின்பால் வினைமுற்று. 'யாக்கையது நிலை யாமையையும், துன்ப மிகுதியையும் உணர்ந்து இதன்மேல் உள்ள பற்றினை விடுத்துச் சிவனது திருவடிகளைப் பற்றல் வேண்டும் என்றபடி. போதல் பற்று விடுதலையும், அடைதல் பற்றுதலையும் குறித்தன. 'உடம்பினால் வரும் துன்பத்தினை எண்ணாமல் அதன்மேல் மக்கள் பற்றுச் செய்கின்றனர்' என்பதைத் திருவள்ளுவர், இழத்தொறூஉங் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉங் காதற் றுயிர்.1 என்பதனால் உணர்த்தினார். 241. பொழிப்புரை: வண்டுகள் தேனை உண்கின்ற கொன்றை மலரால் ஆகிய, நறுமணம் பொருந்திய கண்ணி யைச் சூடியுள்ளவனே, நீ, உனது திருவடியை விரும்பி உன்னைக் கையால்
1. திருக்குறள் - 940.
|