பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை146

244.அரம்கா மணியன்றில் தென்றலோர் கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம்
சிரம்கா முறுவான் எலும்புகொள் வானென்றன் தேமொழிக்கே

245.மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்னுயிர்மேற்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.

77



என, யார் அக்காட்டினை எத்துணை இகழினும் அனைவரும் இறுதியிற் செல்லும் இடம் அதுவேயாதல் அறியத் தக்கது. இறப்பிற்கு அஞ்சுவோர் யாவரும் சுடுகாட்டை நினைப்பினும் துணுக்குறுவர்; இறவாதவன் ஏன் அதற்கு அஞ்சப் போகின்றான்? "கட்டு" என்பது கூறினமையால் அதற்கு இனமான 'உதை' என்பதும் வருவிக்கப்பட்டது.

244.பொழிப்புரை: தேன்போலும் மொழியையுடைய என் மகளுக்குச் சோலைகளில் உள்ள அழகிய அன்றிலின் குரலாகிய அரம், தென்றலாகிய ஓர் யமன், திங்களாகிய அழகிய நெருப்பு, மன்மதன் எய்கின்ற ஐந்து மலர்களாகிய அம்பு, பூசப்படுகின்ற சந்தனம் மேலுக்குக் குளிர்வதுபோலக் காட்டி உண்மையில் வெதுப்புகின்ற உட்பகை ஆகியவற்றால் இவள் உயிர் தளர்ந்தாள். இதைக் கண்டு மனம் இரங்காதவர் இல்லை. ஆயினும், தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் மாலை யாகவும், அணிகலமாகவும் அணிய விரும்புகின்ற அவன் மனம் இரங்கவில்லை.

குறிப்புரை: 'அவனைக் காதலித்தே இவள் இந்நிலையை அடைகின்றாள்' என்றபடி. இதுவும் செவிலியின் இரங்கற் கூற்றே. உள்ளுறையும், "அடிக்கண்ணி" என்னும் பாட்டில் கொண்டவாறே கொள்க. 'அழகிய தீ' என்றது. 'பார்ப்பதற்கு அழகாய்த் தோன்றிச் செயலால் வருத்தம் செய்கின்றது' என்றபடி. அன்றில் தன் துணையை அழைத்து வருந்தும் குரல் தனிமைப் பட்ட காதலர்க்கு வருத்தத்தை மிகுவிக்கும். "உட்பகை" என்பதன்பின், 'இவற்றால்' என்று 'இவை' என்பது தொகுத்தலாயிற்று.

245. பொழிப்புரை: தில்லையில் உள்ள சிவபெருமான், என்னைப் பலரும் பழி தூற்றவும், எனக்கு வருத்தம் ஒரு காலைக்