பக்கம் எண் :

147பொன்வண்ணத் தந்தாதி

246.கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.

78

247.குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோளிழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல்


கொருகால் மிகவும், முன்கையில் உண்ட சங்கவளையல்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகவும், அன்றிலின் குரல் என்னையும் என்உயிரையும் வேறுபடும்படி பிளக்கவும், தென்றல் எனதுஉயிர்மேல் சினந்து நோக்கவும், இன்ன பலஇன்னல்கள் மிகுதிப்படவும், உடையும், மேகலையும்நீங்கிப் போகவும் செய்தான். இவை என்னிடத்துச்செய்த கள்ளச் செயல்கள்.

குறிப்புரை: தலைவி தானும் அறியாதவாறு இவைநிகழ்ந்தமையின், "கள்ளங்கள்" என்றாள்.இதன்பின் 'இவை' என்பது எஞ்சி பக்குவிகளைச்சிவன் அவர்களை யறியாமலே அவர்களைத் தன்வயம்ஆக்கல் இதன் உள்ளுறை.

246.பொழிப்புரை: (உலகீர்) மனத்தில்வஞ்சனைக்கு இடம் அளிக்காமல் போக்கி,உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடையஉள்ளமாகிய வரைவிடத்தில் வீற்றிருக்கின்ற,மேலானவனாகிய சிவபெருமான் தனது நீண்டமுடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடியவெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்றபாம்பு ஒன்று இருத் தலைக் கருத்துட் கொள்ளுங்கள்.

குறிப்புரை : 'அஃது, ஒன்றற்கு ஒன்றுபகையாகியவற்றைப் பகையின்றி வாழச் செய்யும்குறிப்பினது ஆதலின், அவனை யடைந்தால் நீங்களும்பகை முதலிய இடர் இன்றி வாழ்வீர்' - என்றபடிவளாகம் - பரந்த வரைவிடம் 'நுரைக்கண்' என ஏழாவதுவிரிக்க 'சூடிய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று வளாவுதல் - சூழ்தல், 'வளாவுகின்ற' என்பது,"வளாய்கின்ற" எனத் திரிந்து வந்தது.

247.பொழிப்புரை: நீல கண்டத்தை உடையவரே,உமக்கு இவள், ஒன்றைக் கருத்திலே கொண்டு இட்டனதான் அணிந் திருந்த வளையல்களையே. அவைகளை நீர்வந்து கொண்டும் விட்டீர். ஆயினும் இச்சிறுமிஉம்மை இரக்கக் கருதியது உம்மிடத்துள்ள மணம்