பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை148

உறைக்கொன்றை யோவுடைத் தோலோ பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே. 

79

248.

கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தாற்(கு)
இடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட்கவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே. 

80



பொருந்திய விளாம் பூவோ? எலும்போ? விரிந்த சடைமேல் இருக்கின்ற கொன்றை மாலை யோ? உடையாகப் பொருந்திய தோலோ? சாம்பலோ? உடைந்து போன பிச்சைப் பாத்திரமோ?

குறிப்புரை: 'இவை தவிர உம்மிடத்தில் வேறு என்ன இருக்கின்றது' எனச் சொல்லி நகையாடித் தன் தலைவியின் அறியாமைக்குத் தோழி இரங்கியவாறு. "சிறுமி" என்றது பேதைமை குறித்ததே. 'இப் பேதைமையுடையாளை நீ கைவிடலாகாது' என ஓம்படுத்தினாள் என்க. வெறி - நறுநாற்றம் வெள்ளில் - விளா 'உறைதலை யுடைய கொன்றை' - என்க. உடை கலன், வினைத் தொகை. 'நுமக்குப் பெய்தது' என மேலே கூட்டுக. கடவியது - கடாவியது. கேட்டது.

248.பொழிப்புரை: இவள் இங்கு வந்த நீண்ட சடையை யுடைய, பலரும் 'எம் தந்தை' எனப் போற்றுகின்ற சிவபெரு மானிடம் எதனையும் இரக்கவில்லையாயினும் அவன் செய்த தைக் கேளுங்கள்; அவனுக்குத் தனது விரிந்த நெஞ்சத்தை இடமாகக் கொடுத்த ஒன்றுதான் இவள் செய்தது. ஆயினும், அதற்குக் கைம்மாறாக அவன் இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தான். பெரிய கிளைகள் அடிமரத்தின்மேலே இருக்கும் பொழுது அந்த அடிமரம் நிற்கக் கிளை வெட்டப்படுவது உலக இயல்புதானே?

குறிப்புரை: 'அதுபோல, இவட்குப் பற்றுக்கோடாயினார் பலர் இருக்கவும் இவள் இறந்துபடுகின்றாள்' என்பதாம் ஈற்றடி ஒட்டணியாய் நின்றது 'ஆகவே, இவளது அறியாமையின் நிலையை யாம் கண்டோம்' என முடிக்க.

கடவியது - கடாவியது; கேட்டது. "காரிகையாள்" என்பதை முதலிற் கூட்டுக. மடவியவாறு. மடமையளாகிய வகை. இடவிய - இடம் பரந்த. தடவிய - பெரிய; 'தட' என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம். கொம்பு - கிளை தாள் - அடிமனம். தறிக்குறும் - வெட்டப்படும்.