| 249. | தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லுஞ்சடைமேற் செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாமென்று பாவிப்பனே. | | |
| 250. | பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கமெங்கும் காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில் தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல் லோதிக்குச் சந்தித்தவே. | | 82 |
249.பொழிப்புரை: (எங்கள் பெருமானே, நீ பிரமன் தலையைக் கிள்ளினாய்; சலந்தராசுரனைக் கொன்று வீழ்த்தி னாய்; காமனைப் பொறிக்கறிபோல ஆகும்படி நெருப்பாக் கினாய்; இவையெல்லாம் உனக்குப் புகழாதலைக் கண்டு, 'இவளுடைய சில வளையங்களை நீ கவர்ந்தது உனக்குப் பழியாகும்' என்று கருதி நான் வருந்துகின்றேன். குறிப்புரை: கொல், ஆம் அசை. பாவித்தல் - கருதுதல். 'வளையைக் கவர்ந்தாய்' என்றது, 'மெலியப் பண்ணினாய்' என்றபடி. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.1 என்ப ஆதலின், 'அவ்வாறு அருளாமை புகழுடைய நினக்கு ஆகாது' என்பதாம். இது தோழி தலைவனை இரந்து பின்னிற்றல் ஆகலின் பெண்பாற் கைக்கிளை சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் தாள்பரவி ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்2 நின்னடியாய் இடர் களையாய்3 என்றாற்போல, அன்பர் பொருட்டு அருளாளர் விண்ணப் பித்தல் இதன் - உள்ளுறை. 250. பொழிப்புரை: எம் சிறுமி, செய்வது அறிகின்றிலள்; கொட்டாவி விடுகின்றாள்; மனம் நெகிழ இவள் உடம்பெங்கும் குங்குலியம் போன்ற மணம் வீசாநின்றது. குவளை மலர் போலும் கண்கள் நீரைச் சொரியாநின்றன. தன்னை மறக் கின்றாள்; நீல கண்டனைத் தன் கண்களில் நிறுவுகின்றாள். இவையெல்லாம்
1. திருக்குறள் - 1192. 2. திருமுறை - 4.110.1 3. திருமுறை - 1.52.3
|