| 251. | சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற அந்திக்கண் ஆடியி னானடி யார்களுக் காவனவே. | | 83 |
| 252. | ஆவன யாரே அழிக்கவல் லாரமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த |
வெண்மையான பற்களையும், மென்மையான கூந்தலையும் உடைய இவளை வந்து பொருந்தின. ஆகலான் இவள் நாம் முன்பெல்லாம் அறிகின்ற பழைய பெண்டு அல்லள். குறிப்புரை: 'சிவனுக்கு உரியளாய புதியள்' என்பதாம். இது, நாற்றம் தோற்றம் முதலியவற்றால் பாங்கி மதியுடம் பட்டது. சிவஞானிகளது நிலைமையை அவர்பால் நிகழும் சில மெய்ப்பாடுகள் பற்றி உலகத்தார் ஊகித் துணர்தல் இதன் உள்ளுறை, 'செய்யும்' என்னும் வினைகள் பலவற்றுள் முதலதாகிய "பாவிக்கும்" என்பது ஒன்றும் எச்சம்; ஏனைய வெல்லாம் முற்று. "சிறுமி பரிசறியாள்" என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. 'அகம் நெக, அங்கம் எங்கும் குற்குலு நாறும்' என்க. இது சிவனைத் தழுவியதால் உண்டாயது. சோர் தலாகிய, இடத்தின்மேல் நின்ற வினைக்கு, 'நீர்' என்னும் வினைமுதல் வருவிக்க. தாவிக்கும் - தாபிக்கும், ஓதி - ஓதியை உடையாள். "ஓதிக்கு" என்னும் நான்காவதை இரண்டாவதாகத் திரிக்க. 251.பொழிப்புரை: வந்து எதிர்நின்ற நமனுக்கு நமன் ஆவான்; நோய்கட்கு ஒப்பற்ற மருந்தாவான்; நினைத்தால் சிந்தாமணிபோல, நினைப்பவற்றைக் கொடுப்பான்; இனிக் கின்ற அமுதம்போல இனிமையைத் தருவான்; வணங்கினால் எதிர்ப்பட்டுத் தன்வயம் ஆக்கிக் கொள்வான்; தேவர்களும் வணங்க நிற்கின்ற, இரவில் காட்டில் ஆடுகின்ற சிவன் தன் அடியார்களுக்கு ஆகின்ற பொருள்கள் இவைகளாகும். குறிப்புரை: 'தித்தித்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. என்னை, 'எவன்' என்னும் வினாப் பெயரின் திரிபு. அஃது இங்கு 'எத்துணை' என்னும் பொருட்டாய் மிகுதியைக் குறித்தது. மால் - மயக்கம். அஃது இங்குவசப் படுத்துதலைக் குறித்தது. 'காட்டில்' என்பது ஆற்றலால் வந்தது. 'ஆவன இவை' என ஒரு சொல் வருவித்து முடிக்க. 252. பொழிப்புரை: முப்புரத்தை எரித்த கடவுளாகிய தில்லையிலே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அடிதொழு தமையால் (நல்லோர் பலரும் பல நன்மைகளைப் பெற) யான்
|