| தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேனிழந் தேன்கலை யோடு செறிவளையே | | 84 |
| 253. | செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோருமேத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால் கறைவளர் கண்டனைக் காணப் பெரிதுங் கலங்கியதே. | | 85 |
தீவினை செய்தேன் ஆகலின் எனது உடையோடு. செறிந்த வளையங்களையும் இழந்தேன். ஒரு நெறிப்படாத இந்த உலகத்தில் ஊழ் வலியால் மேன்மேல் நன்றாய் வளர்வன வற்றை - அழிக்க வல்லவர் யாவர்! சிறிது சிறிதாய்த் தேய்ந்து போவனவற்றை அவ்வாறு தேயாமல் கட்டிக் காக்க வல்லவர் யாவர்! (ஒருவரும் இல்லை.) குறிப்புரை: இது, சிவபெருமானைக் காதலித்தாள் அக்காதல் நிறைவெய்தாமை பற்றி ஆற்றாது கூறியது. பக்குவ மிகுதியால் சிவனை அடைய விரும்பினார் அதற்குத் தடையாய் நிற்கும் பிராரத்தம் பற்றி வருந்திக் கூறுதல் இதன் உள்ளுறை. ஊழ் வலியாகிய பொதுப் பொருளால் கலை வளைகளை இழந்த சிறப்புப் பொருளைச் சாதித்தமையால் இது வேற்றுப் பொருள் வைப்பணி 'சிவனை அடியைத் தொழுது' என்றதை, 'கள்வனைக் கையைக் குறைத்தான்' என்பதுபோலக் கொள்க. திருந்து அடி செவ்வியவாய பாதங்கள். 253.பொழிப்புரை: செறிக்கப்பட்டவளைகளை உடைய வளே, 'சிவனது செவ்விய பாதங்களாகிய தாமரை மலர்களே குடிப்பிறப்பு, கல்வி, மெய்ப்பொருள் எல்லாமாகும்! என யாவரும் புகழ்கின்ற அத்தன்மையையே நிலைபேறாக உடைய உனது மனம், 'அந்தச் சிவனைத் தாம் விரும்பியதையே விரும்பு கின்ற கீழ்மக்கள் கூட்டத்திற் சென்று காண்பேன்' என்று இப்பொழுது கலக்கமடைந்து விட்டதே; இஃது என்! அந்த மனத்தின்வழி நீ விரைந்து செல்லாதே. குறிப்புரை: இது, தலைவியை ஆற்றுவிக்க வேண்டி, 'தலைவனை யான் விடர்கள் கூட்டத்திற் சென்று கழற்றுரை கூறி நின்னைச் சேர்விப்பேன்' எனத் தலைவனை இயற் பழித்த வழி, தலைவி, 'அவர் விடர்களது கூட்டத்தில் சேர்பவர் அல்லர்' எனத் தலைவனை இயற்பட மொழிந்தது. பக்குவிகள் பால், 'சிவஞானம் இன்றியும் வீடு பெறலாம்' என மயங்கிக் கூறுகின்றவர்களைப் பக்குவிகள் 'அது கூடாது' எனத் தெருட்டுதல் இதன் உள்ளுறை. 'சேவடித் தாமரைப் போது' என மாற்றுக. நிறை - வழுவாது நிறுத்துதல். "நெஞ்சு இது" என்றது. 'தான அவள்' என்னும்
|