| 254. | கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண் மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய் இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்அவிந்தார் அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ(து) எம்மிறையே. |
வேற்றுமையின்மையால் தோழியது நெஞ்சத்தை. "கலங்கியதே" என்பதன்பின் வருவித்தது சொல்லெச்சம் விரையல் - விரையாதே. "வேண்டிற்று வேண்டிய நீசர்" என்பதனை, "காணாதான் - கண்டானாம் தான்கண்டவாறு"1 "பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்"2 முதலியவற்றோடு ஒப்பிட்டு உணர்க. "அக் கறைவளர் கண்டனை' எனச் சுட்டு வருவிக்க. 254.பொழிப்புரை: எங்கள் பெருமானே, கடல்கள் யாவும் தீயால் கொதித்து வற்றிவிட்டன. கரிய மலைகள் பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பூவுலகங்களும் அவ்வெள் ளத்தில் ஆழ்ந்து மறைந்துவிட்டன. வானுலகங்களும் நிலை குலைந்து போயின. பலவாகிய உமது கணங்களும் 'என்ன செய்வது' என்று தோன்றாமல் மயங்கிவிட்டன. 'இறவாதவர்' எனப்படுகின்ற தேவர்களும் இறந்துவிட்டனர். இந்த நிலையில், ஆகாயம் எங்கும் போய் விட்டுவிளங்குகின்ற மின்னலோடு மின்னலாய் ஒளிர்கின்ற உமது நீண்ட சடைகள் சுழல நல்ல தொரு சிறந்த நடனத்தை யார் பார்ப்பதற்கு ஆடுகின்றீர்? குறிப்புரை: 'பார்ப்பதற்கு ஒருவருந்தாம் இல்லையே என்றபடி. இது 'சிவன் சுடு காட்டில் ஆடுபவன்' எனக் கூறப்படுவதன் உண்மையை விளக்கியது. 'சுடுகாடு' என்பது எல்லாம் ஒடுங்கிய நிலை, இது முற்றழிப்பு, அல்லது 'சருவ சங்காரம்' - எனப்படும். 'இந்நிலையில் சிவன் ஆகின்றான்' என்பது, புனர் உற்பவத்திற்கு (மறுமுறைப் படைப்பிற்கு) ஆவன வற்றைச் செய்தலைக் குறிக்கும். அச்செயல் 'சூக்கும பஞ்ச கிருத்தியம்' - எனப்படும். இந்நிலையில் ஆன்மாக்கள் 'சகல கேவலம்' - என்னும் நிலையில் நிற்கும். அந்த ஒரு கேவலத்திற் குள்ளே 'பிரளய கேவலம், விஞ்ஞான கேவலம் - என்னும் இருகேவலங்கள் உளவாகும், இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்துச் சிவஞான யோகிகளது சிற்றுரையால் அறிக. இக்கேவலங்களை உடைய ஆன்மாக்களே சிவனோடு உடன் நிற்கும் பேய்களாகச் சொல்லப்படுகின்றன. இஃது உணராதார், 'சிவன் ஆடும் சுடுகாடு உலகில் பல இடங்களில் உள்ள சுடுகாடுகளே' என்றும், 'பேய்கள் அங்கு வாழும் பேய்களே' என்றும் கருதிவிடுகின்றனர் என்பது கருத்து. நாகம் - சுவர்க்க லோகம். "இமையோர் வியந்தார்"
1. திருக்குறள் - 849. 2. திருவாசகம் - அதிசயப் பத்து 9
|