| 255. | எம்மிறை வன்னிமை யோர்தலை வன்உமை யாள்கணவன் மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்(கு) எம்முறை யாளிவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான் இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே. | | 87 |
| 256. | கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி சிலையிவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொல்செய்கை நிலைபிழை யாதுகுற் றேவல்செய் தார்நின்ற மேருவென்னும் மலைபிழை யாரென்ப ராலறிந் தோர்இந்த மாநிலத்தே. | | 88 |
என்பதை, "பல்கணம்" என்பதன் பின்னர்க் கூட்டுக. 'இமையோர் வியந்தார் என்பது பாடம் அன்று, அலங்கல் - அசைதல். 255. பொழிப்புரை: எமக்கு இறைவனும், தேவர்கட்குத் தலைவனும், உமைக்குக் கணவனும், யாவராலும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வணங்கப்படுபவனும், மூன்று கண் களை உடையவனும், திகம்பரனும் ஆகிய சிவனுக்கு என்னை வஞ்சித்து இவள் என்ன முறை உடையவள் ஆயினான்? (மனைவி ஆயினளோ' - என்றபடி அது நிற்க,) என்னை வஞ்சித்த இவளுக்குச் சிவன் இவள் தன்னை விரும்பியதை அறிந்தும் இவளுக்கு மெலிவை நீக்காமல் மெலிவை விளைவித்து, இவளது அழகிய உடையை அகன்று போகும்படி இவ்வாறு தவறு செய்தது ஏன்? குறிப்புரை: 'அதனை யான் அறிகின்றிலேன்' என்பதாம். 'இறை பிழைத்தான்; என்' என மாறிக் கூட்டுக. 'எழிற் கலை கவரக் கருதியதாகிய இம்முறையாலே பிழைத்தான்' என்க. இது, செவிலி தலைவியது ஆற்றாமை கண்டு தலைவனை இயற் பழித்தது. இறைவனைச் சார்ந்தார்க்கு ஆற்றாமை உளதாதலைக் கண்டு உலகர் இறைவனை இயற் பழித்தல் இதன் உள்ளுறை. 256. பொழிப்புரை: 'எட்டுக் கைகளில் மான், முத்தலைச் சூலம், மழு, நெருப்பு, மணி, மழுவிற் சிறிது வேறுபட்ட கட்டங்கம், கொடி, வில் - என்னும் இவற்றை ஏந்தியுள்ள சிவபெருமானுக்கு மனம், மொழி, மெய் மூன்றும் பிற வழிகளில் செல்லாது பணிவிடை செய்தவர்கள் நிலையாய் உள்ள மகாமேருமலையைப் போன்ற உயர்ந்த குறிக்கோள் களைக் கொள்ளினும் தவறாமல் பெறுவார்கள்' - என்று, அறிவுடையோர் இந்தப் பெரிய பூமியில் எங்குள்ளவரும் அறியக் கூறுவர். குறிப்புரை: "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" எனக் கூறிய திருவள்ளுவர் 'அஃது எய்துதல் அரிது' என்னும் கருத்தால், "மற்றது
|