பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை154

257.மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையவத் தேவரெல்லாம்
ஆநலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங னேயினிப் பாடுவதே.

89

258.பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்த(து)
ஆடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெம் கொற்றவற்கே.

90



- தள்ளினும் தள்ளாமை நீர்த்து"1 என்றார் ஆகலின், 'சிவனடியார்கள் அத்தகைய குறிக்கோள்களைத் தவறாமல் எய்துவர்' என்றார். 'மேருவும்' என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

257. பொழிப்புரை: பெரிய பூமியில் உள்ள மக்களினும் மேம்பட்ட பெருமையுடையவர் தேவர். அத்தேவர் யாவரும் தம்மால் ஆனமட்டும் நன்முறையில் வணங்கும் சிவபெருமான் பெருமையுடையவன், அவனது பெருமையைத் தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரம தேவனும், திருமாலும் ஆகிய அவரே ஆராய்ந்து முற்றம் உணர வல்ல ரல்லர் என்றால். அவனது பெருமையை நாம் எங்ஙனம் முற்ற உணர்ந்து பாநயத்தோடு கூடிய கவிகளால்பாடுவது!

குறிப்புரை: 'இயலாது; ஆகையால் அறிந்த அளவில் பாடுவேம்' - என்பது குறிப்பெச்சம் "யான் அறி அளவையின் ஏத்தி" என்றார் முருகாற்றுப் படையிலும்2 தேவரது பெருமையை உணர்த்தற்கு, "மாநிலத்தோர்கட்குத் தேவர்" என்றார். "தேவர்" என்பதன் பின்னும், "ஈசன்" என்பதன் பின்னும் 'பெருமை யுடையர், பெருமையுடையன்' என்பன எஞ்சிநின்றன.

258. பொழிப்புரை: எம் தலைவனாகிய சிவபெருமானுக்கு அவன் பூசியுள்ள திருநீறு அவன் அணிந்துள்ள படத்தை யுடைய பாம்பு பெருமூச்சு எறிதலால் கையில் ஏந்தியுள்ள நெருப்பு ஓங்கி எரிய, அதனால் அவன் முடியில் அணிந்துள்ள பிறை உருகி ஓழுதுவது போன்று உள்ளது. பின்பு அந்நீறும், உமையாளது பாகமும் ஒன்று சேர்வது, கங்கை நதியும், தெளி வாகிய நீரையுடைய யமுனை நதியும் ஒன்று சேர்ந்தது போன்று உள்ளது.

குறிப்புரை: கங்கை நீர் வெண்மை நிறத்தையும், யமுனை நீர் கருமை நிறத்தையும் உடையன. "பாடிய வண்டு உறை



1. திருக்குறள் - 596.
2. அடி 277.