| 259. | கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால் நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி யேயென்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக னேயென்றும் மன்மதனைச் செற்றவ னேயென்றும் நாளும் பரவுமென் சிந்தனையே. | | 91 |
| 260. | சிந்தனை செய்ய மனமமைத் தேன்;செப்ப நாவமைத்தேன்; வந்தனை செய்யத் தலையமைத் தேன்;கை தொழவமைத்தேன்; பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்;மெய் அரும்பவைத்தேன்; வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே. | | 92 |
கொன்றையினான்" என்பது, "எம் கொற்றவன்" எனப் பட்டவனை. 'அவன்' எனச் சுட்டும் அளவாய் நின்றது. 'அதுவும், உமை பாகமும் கூடியது, கங்கையும், தெண்ணீர் யமுனையும் கூடிய கோப்பு ஒத்தது' என வேண்டும் சொற்கள் வருவித்து இயைத்து முடிக்க. 259. பொழிப்புரை: என்னுடைய சித்தம் எந்நாளும், யாவர்க்கும்' என்றும், 'கோவணமாக உடுத்த உடையை உடையவனே' என்றும், 'புனைந்துள்ள கோலத்தால் நல்ல தவசியே' என்றும், 'நஞ்சை உண்டவனே' என்றும், அஞ்செழுத்தை நெஞ்சில் அமைத்தவர்களால் பெறப்பட்ட வனே' என்றும், 'தலைக் கோலம் உடையவனே' என்றும், 'மன்மதனை அழித்தவனே' என்றும் இவ்வாறே சொல்லித் துதிக்கும். குறிப்புரை: 'வேறொன்றையும் செய்யாது' எனத் தமது உள்ளத்தின் உறைப்பை வெளியிட்டவாறு. சிந்தித்தல் அன்றித் துதித்தல் சித்தத்திற்கு இல்லையாயினும், 'சிந்தித்தலே துதித்தலாம்' என்னும் கருத்தால் 'துதிக்கும்' என்றார். ஆவணம், 'ஆய வண்ணம்' என இறந்த கால வினைத் தொகை. உண்டி - உணவு. உண்டியை உடையவனை, "உண்டி" என்றது ஆகுபெயர். 260. பொழிப்புரை: என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன். உடம்பை மயர்க்கூச்சு எறிவதற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறைவனுக்கு யான் நேர்ந்தன இவை. குறிப்புரை: 'என்னால் ஆயின இவை; இனி அவனது திருவுள்ளம்' என்பதாம். 'மனம் முதலியவற்றை வேறொன்றற்கு
|