பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை156

261.விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை; குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம்; குன்றம்வெண் சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம்; நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
262.வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு தேன்சொரி மாலருவி


வைத்திலேன்' என்றபடி. "ஈசற்கு" என இறுதியிற் கூறியமை யால், முன்னர்க் கூறின பலவும் அவனுக்கேயாதல் தெளிவு.

261. பொழிப்புரை: நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலையுடைய தனங்களை முன்னே கண்டோம், பின்பு அத்தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டனபோல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம். (இவ்வளவும் செய்துவிட்டமை) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

குறிப்புரை: 'செய்யக் கூடிய வஞ்சனைகள் அனைத்தும் செய்தாகிவிட்டன' என்றபடி. 'இங்கு கூறியன எல்லாம் எமது மனம் எம் வழிநின்று சிவனை நினையாமல் தப்பி ஓடிச் செய்த வஞ்சனைகளால் விளைந்தன' என்பதாம். 'சிவனை நினையாது மனம் போன போக்கிலே போகின்றவர் இவ்வாறு கெடுவர்' என்பது கருத்து. 'மகளிரது தனங்கள் முதலில் குங்குமக் குன்று போலக் காணப்பட்டது' என்றது கலவிக்கு முன்னுள்ள நிலையையும், 'அவை வெண்சந்தனம் பூசப்பட்ட குன்று போலக் காணப்பட்டன' என்றது கலவிக்குப் பின்னுள்ள நிலையையும் குறித்து. தலைவரது மார்பில் சந்தனக் குழம்பு இருத்தல் இயல்பு. இன்ப நோக்கில் இன்பமாய்த் தோன்றினும் துறுவு நோக்கில் இவை இடர் ஆதல் அறிக. 'பட்டனையவாக' என ஆக்கம் விரிக்க. 'மதித்தனம்' என்பது முற்றெச்சம். 'விச்சைகள் கொண்டு பண்டே விதித்தனவாகிய வாழ்நாளில் பெரும்பிணி கொதிப்பினில் ஒன்றும் குறை வில்லை' என இயைக்க. விதித்தன - விதிக்கப்பட்டன.

262. பொழிப்புரை: என்னுடை மனத்தில் மயக்கம் நிறைந்து ததும்பும்படி, யான் அறியாமலே எனது கீற்றுப் பொருந்திய வளையல்களைக் கவர்ந்து கொண்டு, யானைத் தோலைப் போர்த்துக்