பக்கம் எண் :

157பொன்வண்ணத் தந்தாதி

அஞ்சன மால்வரை வெண்பிறை கவவியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.

94

263.வீரன் - அயனரி, வெற்பலர் நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர் ஊர்திவெவ் வேறென்பரால்;
ஆரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.

95



கொண்டிருக்கின்ற வீரனை நான் உறங்கும் பொழுதும் மிக வணங்கினேன்.

குறிப்புரை: 'வணங்கியும் அவன் எனக்கு அருள் செய்திலன்' என்பது குறிப்பெச்சம். வஞ்சனையாலே கவர்ந்து கொண்டவன் தன்னை 'வீரன்' என்று சொல்லிக் கொள்வது வெட்கம் - என்பது கருத்து. 'மால் பனிப்பக் கொண்டு' என்க, "கொண்டு" என்னும் செய்தென் எச்சம், "மூடிய" என்பதனோடு முடிந்தது. துஞ்சம் பொழுதும் தொழுதல், இடைவிடாத பழக்கத்தால் நிகழ்வது. "நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"1 என்று அருளிச் செய்தது காண்க. "மால்" மூன்றில் முன்னவை மயக்கம்; ஏனையது பெருமை. பனித்தல் - ததும்புதல். 'அருவியை யுடைய வரை' என்க. வரை - மாலை. 'மயக்க அருவி' என்பதில் மயக்கம், அதற்கு ஏதுவாகிய மத நீரைக் குறித்தது. அஞ்சனம் -மை; அஃது அதன் நிறத்தைக் குறித்தது. வெள்ளிய தந்தங்களை வாயில் கொண்டு நிமிர்கின்ற கரிய யானைக்கு, வெண்பிறை கௌவி அண்ணாக்கின்ற அஞ்சன மலையை உவமையாகக் கூறியது இல்பொருள் உவமம். ஈர் உரி - உரித்த தோல்; இறந்த கால வினைத் தொகை.

263. பொழிப்புரை: எங்கள் இறைவரது தன்மைகள் யாராலும் ஒரு நிலையாக அறிந்து சொல்லுதற்கு இயலாதன. ஏன் எனில், அவர் பெயர் ஒன்றாகாது, 'உருத்திரன், பிரமன், விட்டுணு' - என மூன்று என்றும், அவருக்கு இடம் ஆவதும் ஒன்றாகாது, 'மலை, மலர், நீர்' என மூன்று என்றும், அவரது நிறமும் ஒன்றாகாது, 'தீ வண்ணம், பொன் வண்ணம், அழகு நிறைந்த மேக வண்ணம்' என மூன்று என்றும், அவரது அடையாள மாலையும் ஒன்றாகாது. 'கொன்றை மலர், தாமரைமலர், துளசி' என மூன்று என்றும், அவர் ஏறிச் செல்கின்ற ஊர்தியும் ஒன்றாகாது, 'இடபம், அன்னம், கலுழன்' என மூன்று என்றும் இவ்வாறு அனைத்தையும் மூன்று மூன்றாகவே, அறிந்தோர் கூறுகின்றனர்.

குறிப்புரை: இஃது, ஒருவனாகிய சிவனே 'படைத்தல், காத்தல், அழித்தல்' என்னும் தொழிலை நோக்கி 'அயன், அரி, அரன்' என மூவராய் நிற்கின்றான் - என உணர்த்தியவாறு.



1. திருமுறை - 7.48