பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை158

264.பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனவடியார்க்(கு)
அரியான் இவனென்று காட்டுவன் என்றென்(று) இவையிவையே
பிரியா துறையுஞ் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.

96



ஓர் உருவாயினை மான் ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதற் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயினை.1

என்று அருளிச் செய்தது காண்க. சம்பு பட்சமாகப் பார்க்கும் பொழுது மூவரும் ஒருவனே. அணுபட்சமாகப் பார்க்கின்ற வேறுவேறாம் சம்பு பட்ச அணுபட்சங்களின் இயல்பைச் சித்தாந்த நூல்களுட் காண்க. இறைவனது தொழிலை மூன்றாகக் கூறும் பொழுது மறைத்தல் காத்தலிலும் அருளல் அழித்தலிலும் அடங்கும் என்க. தொழில்களை ஐந்தாக விரிக்குமிடத்துச் சிவன் 'அயன், அரி, அரன்' என்பவரோடு 'மகேசுரன், சதாசிவன்' - என மேலும் இருவராய் ஐவராய் நிற்பன்.

பேர், பதி, நிறம், தார், ஊர்தி - என்பவற்றுள் ஒவ்வொன்றையும் வீரன் முதலிய மும்மூன்றனோடு முறைநிரல் நிறையாகப் பொருத்திக் கொள்க. இவர்தல் - ஏறுதல். இவர் ஊர்தி, வினைத் தொகை, அன்னமும், கலுழனும் "பறவை" என அடங்கின. 'வகையின' என்பதில் சாரியையும், இறுதி நிலையும் தொகுத்தலாயின. அன்றி, 'வகை, ஆகுபெயர்' - என்றலும் ஆம், "வீரன்" என்றது 'அரன்' என்னும் பொருட்டு.

264. பொழிப்புரை: "அடியார்களைப் பிரியாது அவர்களோடு உடன் உறைபவனாகிய சிவபெருமான், பிறர்க்கு அரியவனாயினும், 'யான் என்னைப் பணிந்தவர்கட்கு உரியவன்' என்று சொல்லி உன்னோடு உடன் உறைவான்" என்று, அவன் அடியவர் சொல்ல, யாம், அவனுடைய அடியவர்களை விட்டு அகலாது வந்து பற்றுகின்ற பாவமும், பற்றும், மற்றும் பழி முதலியனவும் ஆகிய இவைஇவை, 'அவன் அடியார்க்கு எளியனல்லன்; அவர்கட்கும் அரியவளே' எனக் கட்டுவன' என்று அவன் திருவடிக்கு என்றும் விண்ணப்பிப்போம்.

குறிப்புரை: இது,

வீ, என்றன்னை விடுதிகண் டாய், விடில்,
என்னை மிக்கார்



1. திருமுறை - 1.128.