265. | பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்;அப் பேதைநல்லாள் காய்சின வேட்கை அரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லது;முலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால்; இவையொன்றும் பொய்யலவே. |
266. | பொய்யா நகரம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்(கு) உய்யா உடம்பினோ(டு) ஊர்வ நடப்ப பறப்பவென்று |
'ஆரடியான்' எனின், 'உத்தரகோச | மங்கைக்கரசின் | சீரடியார் அடியான்' என்று நின்னைச் | சிரிப்பிப்பனே.1 |
என்றது போலப் பிராரத்தத்தை விரைய விலக்காமை பற்றி வருந்திக் கூறியது. பரிதல் - நீங்குதல். 'பரியதனவாய் வந்த' - என ஆக்கம் விரிக்க. "பணிந்தார்க்கு உரியான் - எனச் சொல்லி, - உன்னுடன் ஆவன் - என" என்பதை முதலிலும், "இவை, இவை" என்பதனை "மற்றும்" என்பதன் பின்னும் கூட்டி யுரைக்க, 'என - என்று அடியவர் சொல்ல' என்க. "உன்னுடன்" என்பது வேறு முடிபு ஆகலின் பன்மையொருமை மயக்கம் இன்று. 'இவன் என்று காட்டுவன்' என்பது பாடம் அன்று. அடுக்கு, பன்மை குறித்து நின்றது. 265. குறிப்புரை: அந்தச் சிறுமியாகிய அழகி பேசுகின்ற பேச்சு முழுதும் சிவன் திருப்பெயர்களேயாய் உள்ளன. (நிரம்பாமை காரணமாகக்) காய்கின்ற சினத்திற்கு முதலாய் உள்ள அவளது வேட்கை, சிவனிடத்தில் உள்ளதான, வண்டு கள் மொய்க்கும் கொன்றையை உடைய அவனது முடியின் மேலது. அவள்தன் தனங்களின் மேல் பொருந்திய பூசியுள்ள சந்தனக் குழம்பை (நீயேனும் சிவனை அடையத் தவம் செய்' என்று) அதனைக் கும்பிடுவாள். யான் சொல்லிய இவைகள் சிறிதும் பொய்யல்ல. (மெய்) குறிப்புரை: 'ஆகவே, இனி இவனை நாம் சிவனுக்கு வரைவு நேர்தலே செய்யத் தக்கது' என்பது குறிப்பெச்சம். இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. பக்குவிகளது நிலைமையை அறிவர் அவர்தம் சுற்றத்தார்க்கு உணர்த்துதல் இதன் உள்ளறை. "எல்லாம்" என்பது எஞ்சாமையைக் குறித்தது. தலைவி அருகில் இல்லாமையால் "அப் பேதை நல்லாள்" எனச் சேய்மைச் சுட்டாகச் சுட்டினாள். ஒன்றும் - சிறிதும். 266. பொழிப்புரை: பாவிகட்குத் தப்பாது கிடைக்கின்ற நரகத்திலே நான் புகுந்தாலும், அதைவிட்டுச் சுவர்க்கத்தை
1. திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 48.
|