| நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே. | | 98 |
267. | வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல்; மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்(பு) ஆண்டின அச்சம், வெகுளி, அவா,வழுக் காறிங்ஙனே மாண்டன; சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே. |
அடைந்தாலும், இப்பூமியில் வந்து, வெறுப்பைத் தரினும் விட இயலாத உடம்புகளோடு கூடி, 'ஊர்வன' என்றும் 'நடப்பன' என்றும், 'பறப்பன' என்றும் பிறப்புக்களை எடுத்து வருந்தி வாழ்ந்து இறக்கினும், (யாதேனும் ஒரு பிறப்பில்) பேரரசனாகி நிலம் முழுவதையும் ஆளினும் நான் வேண்டுவன எல்லாம் நான்கு வேதங்களின் ஒலி பொருந்திய நீல கண்டத்தினை உடைய சிவபெருமானது திருவடிகளை மறவாதிருக்கின்ற அந்த ஒரு வரமேயாகும். குறிப்புரை: "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே - வழுவாதிருக்க வரந்தர வேண்டும்"1 என அப்பர் பெருமான் அருளிச் செய்ததும் காண்க. 267. பொழிப்புரை: (படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள்) மக்களைப் படைக்கும் பொழுது 'ஒவ்வொருவரும் இவ்வுடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க' என வேண்டி வரையறுக்கின்றான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. பொதுவாக ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. (இரவு வாழ்க்கை வாழ்க்கையன்று) மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவாய்த் திரண்ட கொடிய நோய்கள் உளவாகும். இனி, வரையறுக்கப்பட்ட. ஆண்டுகளில் தொடக்கப்பகுதி குழவிப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. (இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்!) அவைகளிலும் 'அச்சம், வெகுளி, அவா, அழுகாறு' என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. ஆகையால் (யாம் மிக இளைய பருவத்திற்றானே வேறு எதனையும் பொருட் படுத்தாமல்) நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.
1. திருமுறை - 4.94.8.
|