பக்கம் எண் :

161பொன்வண்ணத் தந்தாதி

268.மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே;
காய்சின ஆனை வளரும் கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.

திருச்சிற்றம்பலம்

சிறப்புப் பாயிரம்

அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலைஅரன்முன்


குறிப்புரை: வேண்டுதல் - விரும்புதல் அஃது அதன்படி வரையறுத்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. இதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. "பாதியும்" என்னும் உம்மை சிறப்பு. கங்குல் இரவு. 'கங்குல் ஆம், பிள்ளைமை ஆம், மூப்பும் ஆம்' என்க. மிகுதல் - எஞ்சுதல். ஈண்டுதல் - திரளுதல். ஆண்டின - 'ஆண்டு' எனப்படும் காலங்கள். 'கள்வன்' என்றது, எளிதில் அகப்படாமை பற்றி.

268. பொழிப்புரை: எளிதில் அகப்படாமை பற்றி,'கள்வன்' எனப்படுகின்ற, நல்ல, உயர்ந்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும், நீண்ட சடையை உடையவனுமாகிய சிவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்கள் யாதோர் உடம்பினையும் பற்றா நிலையாகிய வீட்டைப் பெறுதல் உண்மையே. எங்ஙனம் எனில், பொன்மலையை அடுத்த காக்கையும் அப்பொழுதே பொன்னிறத்தைப் பெற்று விடுகின்றது.

குறிப்புரை: இஃது எடுத்துக்காட்டுவமை. தன்னைச் சார்ந்த பொருளைத் தன்வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையே யுள்ள பொதுத் தன்மை.

சேர்வார் தாமே தானாகச் செயுமவன்

என ஞானசம்பந்தர் அருளிச் செய்தது காண்க.

செம்மைச் சிவமேரு சேர்கொடி யாமே

என்பது திருமந்திரம். கொடி - காக்கை. "சொல்" என்றது பொருளை. "காய்சின ஆனை வளரும்" என்றது கனக மலைக்கு அடைமொழி.

சிறப்புப் பாயிரம்: இதிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்துக் கழறிற்றிவார் நாயனார் புராணத்தால் அறிக. இது பிற்காலத்து ஆன்றோரால் செய்யப் பட்டது.