பக்கம் எண் :

163திருவாரூர் மும்மணிக்கோவை

சேரமான் பெருமாள் நாயனார்
அருளிச் செய்த

7. திருவாரூர் மும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

269.

விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்(டு)

5இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்

கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
10உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்

கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்(து)
அஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
15

கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்

பொங்குபுயல் காட்டி யோளே; கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்

20கல்லோ சென்ற காதலர் மனமே. 1

269. அகவற் பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை இவை முறையாக மாறி மாறி வர, முப்பது செய்யுட்களை அந்தாதியாகக் கோப்பது ‘மும்மணிக் கோவை’ என்னும் பிரபந்தமாகும். இப்பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவர் திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமான்.

இப்பாட்டின் திணை பொருள்வயிற் பிரிவாகிய பாலை; கைகோள் கற்பு; தோழி கூற்று; கேட்போர் அவளது நெஞ்சு; பயன்