பக்கம் எண் :

167திருவாரூர் மும்மணிக்கோவை

வெண்பா

273.துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற,
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்,
கண்டத்துக் கொப்பாய கார். 5

புரிதலை விரும்பிக்குற்றம் அற்றவனாகிய அரசன் பாசறைக்கண்ணே இருத்தலால் (எம்மையும், எமக்கு அவர் சொல்லிச் சென்ற சொல்லையும் நினைப்பாரல்லர்; ஆதலின்) யானோ இவ்விடத்திலே, அளவற்ற ஆற்றல் வாய்ந்த அருச்சுனனுக்கு அக்காலத்தில் அவன் போரில் இறந்து படாது வெற்றி பெறும்படி நல்ல வரத்தைக் கொடுத்த மேலோனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள, அழகிய, குளிர்ச்சி மிக்க திருவாரூரை நினைத்து மகிழும் நல் ஊழ் இல்லாது, உலக மயக்கத்திற் கிடக்கும் மாக்களைப் போலத் துயரத்தையே நுகர்ந்து இறந்துபடும்படி என்னுடைய கண்கள் உறங்குகின்றில.

குறிப்புரை: ‘இனியான் என் செய்வேன்’ என்பது குறிப்பெச்சம். இதுவும் உரிப்பொருளாற் பாலை. வினைவயிற் பிரிந்த தலைவன் நீடத் தலைவி பருவங் கண்டு ஆற்றாமை துறை. மயரிய - மயங்கிய. “கடிய, கொடிய” என்பன, ‘மணம் பொருந்திய, கொடியில் உள்ள என்னும் பொருளவாயினும் ‘கடுமையுடைய, கொடுமையுடைய’ பிற நயங்களையுந் தந்தன. இதனுள் இயைபுருவகம் வந்தமை காண்க. இஃது இடையே குறளடி பெற்றமையால் இணைக்குறள் ஆசிரியப்பா.

273. பொழிப்புரை: துயிலாமைக்கு ஏதுவாகிய துன்பம் எம்மிடத்திலே தோன்றுமாறு தோன்றிப் பூவாகிய நெருப்புத் தோன்றும் படியும், மயில்கள் ஆடும்படியும் அடுக்கடுக்காய் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ள பல அண்டங் கட்கும் அப்பால் உள்ளவனும், அழகிய திங்களாகிய கண்ணியைச் சூடினவனும் ஆகிய சிவபெருமானது கண்டத்துக்கு ஒப்பாய் உள்ள முகில் வந்துவிட்டது.

குறிப்புரை: ‘இனித் தலைவர் வருவார்’ என்பது குறிப்பெச்சம். ‘வாராராயின் யாம் துயிலேம் என்பதை அவர் அறிவார்’ என்றற்கு, ‘துயிலாநோய் யாம் தோன்றக் கார் வந்தது’ என்றாள் இது, ‘பருவம் கண்டு தலைவி ஆற்றாள்’ எனக் கருதி ஆற்றுவித்தற் பொருட்டுத் தலைவனை இயற் பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. “நோய் யாம் தோன்ற” என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. தோன்றித் தீ, உருவகம் ஆல், மாது, ஓ அசைகள்.