பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை168

கட்டளைக் கலித்துறை

274.காரும் முழக்கொடு மின்னொடு வந்தது; காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது; சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன; துன்னருநஞ்(சு)
ஆரும் மிடற்றண்ணல் ஆரூரன் ஐய அணங்கினுக்கே. 

6

அகவற்பா

275.அணங்குறை நெடுவரை அருமைபே ணாது,
மணங்கமழ் தெரியல் சூடி, வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
5ஒருதனி பெயரும் பொழுதில், புரிகுழல்

274. பொழிப்புரை; மேகமும் இடியோடும், மின்னலோடும் வந்தது. தலைவர் சொல்லியபடி அவரது தேரும், தெருவும் ஆரவாரிக்கும் படி புகுந்தது. நினைத்தற் கரிய விடத்தை உண்ட கண்டத்தினை உடைய முதல்வராகிய சிவபெருமானது ஆரூரை ஒத்தவளாகிய அழகிய தலைவி தன் கைவளைகள் மெலிவால் கழல்வனவாய் இருந்தவை இப்பொழுது பூரிப்பால் நெரிவனவாயின.

குறிப்புரை; இது, பிரிந்திருந்த தலைவன் தான் குறித்தபடி வந்தமை யறிந்து கண்டோர் கூறியது. “காரும், தேரும்” என்னும் உம்மைகள் எதிரது தழுவியதும், இறந்தது தழுவியதுமாய எச்ச உம்மைகள். “தெருவும்” என்னும் உம்மை உயர்வு சிறப்பு. ‘அன்ன’ என்பது கடைக் குறைந்து நின்றது.

275. பொழிப்புரை; தலைவ, தெய்வம் தங்கும் பெரிய மலைகளை ‘அவை அத்தன்மைய’ என்றும், ‘ஏறுதற்கு அரியன’ என்றும் எண்ணாது, நறுமணம் கமழும் மாலையைச் சூடிக் கொண்டு, நாள்தோறும், வீசுகின்ற ஒளியையுடைய நீண்ட உனது வேற்படையே உனக்கு முன்னே வழியை விளக்கும் விளக்காய் அமைய, மிக்க வேகத்தை யுடைய கான்யாற்று நீண்ட நீரை நீந்திக் கடந்து; நீ ஒருவனே தனியாய் வரும்பொழுது, ‘பின்னப்பட்ட கூந்தலையுடைய தேவ மகளிர் உன்னை, ‘தேவன்’ என மருண்டு, திண்மை வாய்ந்த உனது மார்பின் கண் பொருந்துதற்கு நீங்காக் காதல் மிகுகின்றவராய் உன் குணத்தை வேறுபடுத்திடுவர்’ என்று, பகைவரது மூன்று ஊர்களும் ஒருங்கே எரிந்தொழியும்படி ஓர் அம்பையே ஆராய்ந்து எடுத்து எய்த, மாதொரு பாகனாகிய இறைவனது திருவாரூரில் நீர் வளத்தாற் சிறந்த பொய்கையிற் பூத்த தாமரை மலர் போலும் ஒளி