| வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்(து) ஆனாக் காத லாகுவர் என்று புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள், கலைபிணை திரியக் கையற வெய்தி | 10. | மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து, அல்லியங் கோதை அழலுற் றாஅங்(கு) எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார் திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த அரிவை பாகத் தண்ண லாரூர் | 15. | வளமலி கமல வாள்முகத்(து) இளமயிற் சாயல் ஏந்திழை தானே. 7 |
வெண்பா 276. | இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின் உழையாகப் போந்ததொன் றுண்டோ ? - பிழையாச்சீர் |
பொருந்திய முகத்தையும், இளைய மயிலினது சாயல்போலும் சாயலினையும், ஏந்திய அணிகலங் களையும் உடைய என் தோழி உன்னை வெறுக்கும் உள்ளத் துடன் இமை குவியாத கண்களை யுடையவளாய், எங்கள் குடில்களை யடுத்து ஆண்மான்கள் பெண்மான்களோடே பிரியாது திரிதலைக் கண்டு செயலற்று, ஆற்றாமையால் கையிலுள்ள மெல்லிய விரல்களை நெரித்துக் கொண்டு, விம்மி வெப்பமாக மூச்செறிந்து, அக இதழோடு கூடிய பலவகை மலர் களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று கண்ணீர் விட்டு அழுதல்போல (இரவு முழுதும்) எல்லையில்லாத பெருந்துயரை எய்தி அழாநின்றாள்; (அவளை யான் ஆற்றுவிப்பது எங்ஙனம்?) குறிப்புரை: ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். இது தலைவன் களவொழுக்கத்தை நீட்டியாது வரைதலை வேண்டித் தோழி இரவு வருவானை ‘வாரற்க’ என இரவுக் குறி விலக்கியது. இது முதல் கரு, உரி முப்பொருளாலும் குறிஞ்சி. “கலை பிணை திரிய” என்றது, ‘நீயும் அதுபோல இவளை வரைந்து கொண்டு பிரியாதிருத்தல் வேண்டும்’ என்பதைக் குறித்த உள்ளுறை யுவமம். ‘மணங்கமழ் தெரியல் சூடி” என்றது, அவரது மருட்சிக்கு மற்று மொரு காரணம் உண்மை கூறியது. 276. பொழிப்புரை: அணிகலன்கள் நிறைந்த, அழகிய தனங்களை யுடையவர்களே, வறிது படாத புகழையுடைய பெரியோனும், தீயில்
|