பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை170

அம்மான், அனலாடி, ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு. 

8

கட்டளைக்கலித்துறை

277.களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூங்கழல்மாட்(டு)
ஒளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே. 

9

அகவற்பா

278.இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது;
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது;

நின்று ஆடுவோனும், திருவாரூரில் உள்ள முதல்வனும் ஆகிய சிவபெருமான் முற்காலத்தில் உரித்த யானையே போன்ற அந்த யானை இந்தக் குளிர்ச்சியான புனத்தின் பக்கமாகப் போந்ததொரு செயலை நீவிர் கண்டது உண்டோ ?

குறிப்புரை: இஃது, இயற்கைப் புணர்ச்சியிலும், இடந்தலைப் பாட்டிலும், பாங்கற் கூட்டத்திலும் தலைவியைக் கூடி இன்புற்ற தலைவன் பாங்கியிற் கூட்டத்தின் பொருட்டு அவளை மதியுடம்படுத்தற்கு அவர் இருவரும் உள்வழிச் சென்று வேழம் வினாயது. “அன்ன” என்பது சுட்டு.

277. பொழிப்புரை: யானைகள் உலாவுதலால் மக்கள் செல்லாத வழியில் கையில் உள்ள வேல் ஒன்றே துணையாக, ஆகாயத்தினின்றும் இறங்கிய, ஒலிக்கும் ஒலியையுடைய கங்கையைச் சடையில் தாங்கிய தலைக் கோலத்தையுடைய சிவபெருமானது அழகிய திருவடிகளை வணங்குதற்பொருட்டு அவற்றை நோக்கி, ஒளிவீசுகின்ற இரத்தினங்களால் ஆயவளைந்த அணிகலன்களை அணிந்த தேவர் மட்டுமே செல்கின்ற மிகுந்த இருட் காலத்தில் நீ அத்தேவர்காண இங்கு வருகின்றாய்!

குறிப்புரை: ‘இது தகாது’ என்பது குறிப்பெச்சம். இதன் திணையும், துறையும் மேல், “அணங்குறை நெடுவரை” எனப் போந்த பாட்டினவேயாம். ‘அர்த்த யாம பூசையில் தேவர் சிவபெருமானைச் சென்று வணங்குவர்’ என்பது பற்றி “பிஞ்ஞகன் பூங்கழல் மாட்டு இமையோர் செல்லும் இருள்” என்றார். கண்டாய், முன்னிலை அசை.

278. பொழிப்புரை: நெருங்கிய சோலைகளைப் பக்கத்தே உடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாய் உள்ள வனும்,